Sunday 28 April 2013

பெண்ணினம்...!(2)

பெண்மையின்-
சிறப்பு-
தாய்மை!

தாய்மைக்காக-
ஏங்கும்-
திருமணமான-
பெண்களின் நிலைமை!?

காலம் -
தள்ளி -
போனால்!

எப்படியெல்லாம்-
குத்தி கிழிக்கபடுகிறாள்-
சொற்களால்!

"தாமதத்திற்கு"-
ஆணும்-
பெண்ணும்-
பரிசோதிக்க-
உள்ளாகனும்!

ஆனால்-
பெண்ணைத்தானே-
முதலில் கை நீட்டுது-
உலகம்!

எத்தனை-
தம்பதிகள்!

குழந்தை-
பாக்கியத்திற்காக-
பரிதவிக்கிறார்கள்!

எவ்வளவு-
லட்சங்கள்-
செலவுகள்!

குழந்தைக்காக-
ஏங்கும் -
உறவுகளுக்காக-
என்றும் நீடிக்கும்-
என்-
பிரார்தனைகள்!

இப்படியாகவும்-
உள்ளார்கள்!

வேறு ஒரு-
நிலையை-
 பாருங்கள்!

கருவுற்றவுடன்-
கலங்குபவர்கள்-
எத்தனை பேர்கள்!?

முதல் -
குழந்தை-
பெண்ணென்றால்-
எவ்வளவோ-
நிந்தனைகள்!

பிரசவ வலியை-
விட!

எத்தனை-
மன வலிகள்-
அதை விட!?

வயிற்றில்-
உள்ளது -
ஆணா!?
பெண்ணா!?

பிறப்பது-
தூளியில் ஆடவா!?
கள்ளி பால் ஊற்றவா!?

(தொடரும்....!)


       

4 comments:

  1. தொடரட்டும் கேள்விகள்.....

    பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் எத்தனை எத்தனை.....

    ReplyDelete
  2. இந்த நிலைமை முன்பை விட சிறிது மாறியுள்ளதும் உண்மை...

    சிந்தனை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம்.

    ReplyDelete
  4. பெண்ணின் வலிகளை வரிகளாய் விவரித்த விதம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete