Wednesday 3 April 2013

உதவி பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்!

பூக்கள் என்றால்-
மணம் தர-
வேண்டாமா!?

காதல் என்றால்-
கனிவு-
வேண்டாமா!?

உளி என்றால்-
செதுக்கிட -
வேண்டாமா!?

தலைமை என்றால்-
அர்பணிப்பு-
வேண்டாமா!?

ஆட்சியாளர் என்றால்-
ஆளுமை-
வேண்டாமா!?

பட்டங்கள் பெற்றுவிட்டால்-
பண்புகள்-
வேண்டாமா!?

மதிப்பெண்ணை வைத்து-
பெண்களை நாசம்-
செய்த நாய்களையும்-
படித்ததுண்டு!

மாணவனையே-
"கூட்டி போன"-
"பாதகத்தியையும்"-
படித்ததுண்டு!

நல்லொழுக்கம்-
தர வேண்டியவர்களே-
நாசம் செய்ததை-
அறிந்ததுண்டு!

அமாவாசைக்கு பின்-
அழகும் வெளிச்சமும்-
தரும் இளம்பிறையைபோல!

ஒரு செய்தி இருந்தது-
காயத்தில் மருந்தை-
தடவியது போல!

செருப்புகளுக்கு-
வர்ணம் பூசுகிறார்!( ஷூ பாலிஷ்)

அநாதை குழந்தை-
படிப்புகளுக்காக-
பகுதி நேரமாக-
பார்கிறார்!

செல்வகுமார் எனும்-
உதவி பேராசிரியர்!

சுயநலத்தால-
சொத்து சேர்க்கும்-
உலகத்துல!

பிறர் நலத்தில்-
அக்கறை கொள்ளும்-
சிலரால !

மனிதாபிமானம்-
சாகாமல்-
இருக்குதுபோல!

//இத்தகவலை பகிர்ந்த சுரேஷ் சகோதருக்கு மிக்க நன்றி!
முழுவதும் படிக்க இங்கு செல்லவும்.
.http://thalirssb.blogspot.sg/2013/04/blog-post.html?m=1///







4 comments:

  1. கவிதை என்றால் இதுபோல
    மனத்தாழம் வரைப்
    பாயவேண்டாமா ?
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்னும் மனித தெய்வங்கள் அங்கங்கே வாழ்கிறார்கள்...

    பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    தளிர் அண்ணாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  3. பேராசியர் செல்வகுமார் போன்றவர்கள் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சமாவது நல்லது நடக்கிறது.

    தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்லதொரு ஆசிரியரை நயம்பட கவிநடையில் பாராட்டியமைக்கும் என்னை குறிப்பிட்டதற்கும் நன்றி!

    ReplyDelete