Friday 24 May 2013

பெண்ணினம்..!(26)

சங்க காலத்திலும்!
இந்த காலத்திலும்!

மன்னராட்சியிலும்!
மக்களாட்சியிலும்!

நடந்தது-
வேறு வேறு-
பேராலும்!

அந்தபுரங்களாக!
தேவதாசி முறைகளாக!

சின்ன வீடுகளாக!
இன்னும் பல-
வியூகங்களாக!

ஆணுக்கு-
மன்மதன்!-
பேரு!

பெண்ணுக்கு...!?
பேரு..!?

ஆணின் குடும்பம்!
சப்பை கட்டு கட்டும்!

ஆனால்-
பெண்ணின் குடும்பம்!?

தலை குனிந்து-
நிற்கும்!

அவ்வுறவில் வந்த-
சந்ததிகள்-
சந்தி சிரிக்கும்!

ஒருவனுக்கு-
ஒருத்தி!-
நம் தேச பண்பாடு!

நல்லாதான்-
இருக்கு-
ஆனால்-
உண்மை நிலைப்பாடு!?

எய்ட்ஸ் நோயாளிகள்-
எண்ணிக்கையில்-
முதல் ஐந்திடத்தில்-
நம் தேசத்திற்கும்-
இடமுண்டு!

அப்படியானால்-
அப்பண்பாடு-
எங்கே-
உண்டு!?

"ஒன்றோடு-"
நின்று கொண்டால்-
நலம்!

ஒன்றுக்கும்-
மேற்பட்டால்-
என்னாகும்!?

பெண்களையும்-
பாதுகாக்கணும்!

அதற்கு-
வேறு வழி இருப்பதையும்-
உணரனும்!

(தொடரும்...)







3 comments:

  1. நல்ல கருத்துக்கள்... தொடருங்கள்...

    ReplyDelete
  2. கோபக் கொப்பளிப்ப்பில்
    கவிதையில் மட்டுமல்ல
    எங்கள் உள்ளங்களிலும் சூடு
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை! தொடருங்கள்!

    ReplyDelete