Wednesday 16 October 2013

கற்பனை பறவை!

வான் வெளியெங்கும்-
பறந்து திரிந்து!

பூலோகமெங்கும் -
பயணித்து!

பூங்காவனங்களின்-
வாசனைகளை-
நுகர்ந்து!

பாலைவனங்களின்-
வெயிலில்-
காய்ந்து!

மலைகளின் -
பசுமைகளை-
மனகண்ணில்-
உள்ளிழுத்து!

அருவிகளின்-
நீரோட்டைதில்-
இரண்டற கலந்து!

அனுபவங்களை-
எழுதிட-
எனக்கும்-
ஆசையே!

ஆனால்-
ஒவ்வொரும் முறையும்-
அடைவது-
நிராசையே!

பறக்கும்-
எனது-
கற்பனை எனும்  பறவை!

உடைபட்டு-
இழக்கிறது-
தன் சிறகை!

போர்விமானங்களில்-
அடிபட்டு!

சாதிய- 
மதரீதியான-
அரிவாள்களில்-
வெட்டுப்பட்டு!

பாலியல் கதறல்களின்-
சப்தம் கேட்டு!

என்-
கற்பனை பறவை-
குற்றுயிராக-
கிடக்குறது-

அதனால்தான்-
நாட்டு நடப்புகளை-
பெரும்பாலும்-
சொல்கிறது!


2 comments:

  1. சொன்ன நாட்டு நடப்புகள் உண்மை...

    ReplyDelete
  2. காட்சிகள் கவிதை ஆகின்றன! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete