Sunday 6 October 2013

கண்ணீர் பூக்கள்.!!!

தண்ணீர் தெளித்த-
பூக்களை-
கண்டிருப்பீர்கள்!

கண்ணீரில்-
மூழ்கும்-
பூக்கள்-
நாங்கள்!

மல்லிகை பூக்கள்-
மன்னவனை-
நினைவூட்டும்!

எங்கள்-
கண்ணீரால்-
தலையணை-
நனைந்திடும்!

தண்ணீரின்-
உயரத்திற்கு-
அல்லி உயரும்!

அல்லிக்கும்-
எங்கள் நிலையறிந்தால்-
தண்ணீரிலேயே-
அழுகிடும்!

பத்து மணி பூக்கள்-
பத்து மணிக்கு-
பூக்கும்!

எங்களது-
வாழ்வில்-
வசந்த பூக்கள்-
பூக்கும்!?

வண்ண வண்ண பூவெல்லாம்-
பூமாலையில்-
சேரலாம்!

பூசூடியவுடன்-
"போனவன்"-
திரும்புவானா!?-
கேள்வியே-
மிஞ்சும்!

பிள்ளை முகம்-
காணாத-
தந்தைகள்!

மகனை-
காணாமல்-
இறந்த-
தாய்மார்கள்!

இப்படியாக-
அனாதையாக்கப்பட்ட-
பூங்கவனங்கள்-
நாங்கள்!

இன்னும்-
பாடையில்-
ஏற்றபடாத-
உயிருள்ள பிணங்கள்-
நாங்கள்!

யார் இவர்கள்!?
மதகலவரங்களில்-
கணவனை -
இழந்தவர்கள்!

சாதீய சண்டையில்-
சம்பாதிப்பவர்களை-
இழந்தவர்கள்!

சிறைபட்ட-
அப்பாவிகளின்-
அபலைகள்!

துடைக்கப்படுமா!?-
இவர்களது-
கண்ணீர்கள்!?

6 comments:

  1. கவனிக்கப் படாதவர்களை கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட கவிதை.
    இன்னொரு புறபக்கத்தை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. இன்னும்-
    பாடையில்-
    ஏற்றபடாத-
    உயிருள்ள பிணங்கள்-
    நாங்கள்!//

    அருமையாகச் சொன்னீர்கள்
    பற்றியவுடன் சட்டெனத் தொடரும்
    சரவெடி நெருப்புப்போல
    தங்கள் சிந்தனைத் தொடர்ச்சியின் வேகம்
    பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கண்ணீர்ப் பூக்களைக் கவனிப்பார் யார் ?

    ReplyDelete
  4. கண்ணீர் பூக்கள் கண்ணீர் சிந்த வைத்தது! நிலை மாற வேண்டும்!

    ReplyDelete
  5. //யார் இவர்கள்!?// கேடற்ற யாராலோ பலியாகும் அப்பாவிகள்....
    யார் கவனிப்பார் இவர்களை? நீங்கள் அவர்களை நினைத்துக் கவிதை படைத்துவிட்டீர்கள்..இக்கவிதை இந்நிலை மாற உதவட்டும்,,,இந்த 'இவர்கள்' உருவாகாமல் இருக்கட்டும்!

    ReplyDelete