Monday 12 September 2011

இப்படிக்கு......

 ஓர் மரம் -
தோப்பாகுமா?
ஓர் பூ -
பூந்தோட்டம் -
ஆகுமா!?

ஜோடிகளை -
இணைப்பது-
தோப்பாக்கி விட!

ஜோடியாக -
வருபவளோ -
நினைக்கலாமோ -
துண்டாக்கி விட!

சீர் கொண்டு -
வந்தவளே!

என்னை-
சீர் தூக்கி பார்த்த -
பின் தான் -
உன்னை -
தாரமக்கினார்கள் -
உனது சொந்தங்கள்!

சதை பிண்டமாக-
 பிறந்தேன் -
வருங்காலத்தில் -
உதவுவேனா ?-
உதவாக்கரை -
ஆவேனா!-என்று -
தெரியாமல்-
சீராட்டி வளர்த்தது -
எனது சொந்தங்கள்!


உடனே துண்டித்திட -
அதென்ன -
தொலைகாட்சி அலைவரிசையா?
தொலை பேசி தொடர்பா?-
அல்ல-
தொப்புள் கொடி உறவு!

கொஞ்ச நாள் -
நட்பை கூட -
முடியாது மறக்க !

கொஞ்சி வளர்த்து -
நெஞ்சில் பாசத்தையும் -
மார்பில் பாலையும் -
தந்தவளை-
முடியுமா?-
என்னால் ஒதுக்க!

வயிறு முட்ட -
தின்பவனுக்கு -
தெரியாத நிலை!

வயிறு ஒட்டி -
எலும்பு தெரிபவனின் -
நிலை!

கஷ்டத்தை மட்டும் -
சுவைத்தவள் -
காசுக்கரி உனக்கு-
என்னை-
கணவன் ஆகினாள்!

காசுக்காரி உறவு -
அவளை
விட்டு தூரம் -
ஆக்கி  விடும் -
என்பது தெரியாமல்!

என் வீட்டு -
நெளிஞ்ச சட்டியின் சோத்துக்கும்-
கிழிஞ்ச என் தாயின்-
சேலை வாசத்துக்கும் -
ஈடாகுமா!?

உன் வீட்டு -
குளு குளு அறையும் -
கம கம சாப்பாடும் -
அந்த சுகத்தை தருமா!?

அன்று-
நான் ,
ஏழை வீட்டு-
சீமான்!

இன்று ,
பணக்கார வீட்டில் -
'சீ' என்று ஆனவன்!

இப்படிக்கு ,
வீட்டோட மாப்பிள்ளை.

6 comments:

  1. அன்று-
    நான் ,
    ஏழை வீட்டு சீமான்!

    இன்று ,
    பணக்கார வீட்டில் -
    'சீ' என்று ஆனவன்

    அருமையான கவிதை.

    ஆண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டிய கருத்து,

    ReplyDelete
  2. ayya!ungal vimarsanathirkku !nantrikal pala!melum ungalathu vimarsanam ethir paarkkirem!

    ReplyDelete
  3. //உடனே துண்டித்திட -
    அதென்ன தொலைகாட்சி அலை வரிசையா?
    தொலை பேசி தொடர்பா?-அல்ல
    தொப்புள் கொடி உறவு!

    கொஞ்ச நாள் நட்பை கூட -
    முடியாது மறக்க !
    கொஞ்சி வளர்த்து -
    நெஞ்சில் பாசத்தையும் -
    மார்பில் பாலையும் தந்தவளை-
    முடியுமா?என்னால் ஒதுக்க!//

    அடடா..
    எப்படி முடியுது உங்களால் மட்டும்
    இப்படி வரிகளை செதுக்க!

    ReplyDelete
  4. அன்பின் சீனீ - சீமானாக வளர்ந்தவன் சீ ஆனது காலத்தின் கொடுமை - வீட்டோட மாப்பிள்ளை - பிறந்த வீட்டினை மறக்கடிக்கும் மனைவியின் செயல்கள் ........ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சீனா!


      உடனடி வரவிற்கும் -
      கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!

      Delete