குறைத்து விட்டேன்!-
சிலுப்பி கொண்டிருந்த-
பிடரி முடியை!
கத்தரித்து கொண்டேன்-
முறுக்கி இருந்த-
மீசையை!
இறக்கி விட்டுட்டேன்-
தூக்கி கட்டி இருந்த-
வேஷ்டியை!
விட்டு விட்டேன்-
"கூட்டத்தோட"-
சுத்துவதை!
சிரித்து மாத்தி கொண்டேன்-
சிடு சிடு என -இருந்த
முகத்தை!
மறந்து விட்டேன்-
கெட்ட வார்த்தையில்-
திட்டுவதை!
தவிர்த்து விட்டேன்-
என்னிடம் உனக்கு-
பிடிக்காததை!
தவித்து விட்டேன்-
தெரிந்த பின்-
என்னையவே உனக்கு-
பிடிக்காததை!!
துவக்கம் தொடர்ச்சி முடிவு மூன்றும் மிக்ச் சிறப்பாக
ReplyDeleteஅமைந்துள்ளது.மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungalukku periya manasu-
athanaalthaano-
padippathoda -mattumallaamal
vimarsanam thanthu ookkivikkireerkal !
nantri ayya!