மறைந்து கொண்டு-
பார்ப்பதும்!
மறையும் வரை-
பார்ப்பதும்!
சிரித்து விட்டு-
சிணுங்குவதும்!
சிணுங்கி கொண்டே-
சிரிப்பதும்!
சாடையாக-
பேசுவதும்!
சத்தமாக -
பேசியதும்!
வேகமாக -
நடப்பதும்!
நடையின் வேகத்தை-
குறைப்பதும்!
தொலை பேசியில்-
அழைத்து விட்டு-
பேசாமல் இருப்பதும்!
பேசாமல் இருக்கவே-
தொலை பேசிக்கு-
அழைப்பதும்!
செய்கைகளால்-
வினாக்கள் தொடுத்தவள்-
நீயே!
விடை தேடி-உன்
வீட்டை சுற்றியவன்-
நானே!
உனக்கு-
"அப்புராணி" என்ற -
பெயரும்!
எனக்கு-
"பொம்பள பொறுக்கி"-
என்ற பெயரும்!
ஏனடி!?
நீங்கள் சொல்வது சரிதான்
ReplyDeleteநானும் இப்போதுதான் யோசிக்கிறேன்
நிகழ்வுகளை அடுக்கிச் செல்லும் விதமும்
வார்த்தைப் பிரயோகமும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ayyaa ramani avarkale!
Deleteungalukku enathu -
nantrikal! pala!
எய்தவ[ன்] ள் இருக்க அம்பை நோவதுதானே பழக்கம்!
ReplyDeletesariyaaka sonneenga salothari!
Deleteungal varavukku nantri!