Saturday 18 August 2012

கெட்ட சதையாக...


பகலில் -
பசித்திருந்தோம்!

இரவில்-
விழித்திருந்தோம்!

இரண்டிலும்-
இறைவனை-
தியானித்திருந்தோம்!

சாக்கடையே-
கதியென்றால்-
சந்தனமாகவே-
மணக்கும்!

கிணற்று தவளை-
கிணறையே-
சுவர்க்கமாக-
நினைக்கும்!

அதுபோலவே-
மனிதர்களாகிய-
நாமளும்!

பாவங்கள்-
பழகியே போனதால்-
பாழாகி போனோம்!

இருந்தது -
விடவே முடியாத -
புகையாக!

ஆனது-
சில மணி நேரங்கள்-
பகையாக!

ஊரான் வீட்டு-
பேச்சென்றால்-
ஊறுகாயை பார்த்தது போல்-
வாய் ஊரும்-
எச்சிலாக!

இருக்கிறது-
எத்தனையோ-
விதமான பாவங்களாக!

அத்தனை நாம்-
நினைத்தோம்-
சாதாரணவைகளாக!

தப்புகளை-
தவறென உணர்த்தியது-
நோன்பு காலம்!

"அதனை" மீண்டும்-
தொடர்ந்தால்-
யாருக்குதான்-
என்ன லாபம்!?

இருந்தது-
தவறுகள்-
விட்ட கதையா!
தொட்ட கதையா!

ஒதுக்குவோம்-
அதனை-
உடலில் ஒட்டிய -
கெட்ட சதையா...!!


தொடர்புடைய இடுகை





17 comments:

  1. குறை களைவோம் !
    நிறை பெறுவோம் !
    அருமை !

    ReplyDelete
  2. சிறப்பான படைப்பாக்கம் நண்பா

    ReplyDelete
  3. சிறப்பான கருத்துக்கள் கொண்ட அற்புத கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  4. அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. கெட்ட சதைதான்...
    ஆனால்
    வெட்ட முடியாதே...!!

    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  6. அருமையான கவிதை. அழகான வரிகள். தொடருஙகள்.

    ReplyDelete
  7. தப்புக்களை திருத்திய நோன்புகாலம்!ம்ம் அருமை இந்த காலத்தில் இறைவன் யாசிப்பு மிகப்பொருத்தம்!

    ReplyDelete
  8. ரம்லான் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  9. நோன்பின் மான்பு அருமை நண்பா

    ReplyDelete