Wednesday 15 August 2012

முன்னோட்டங்கள்...!



ஒரு வருட படிப்பு-
மறு வகுப்பு-
செல்வதற்கு!

அடியையும் மிதியையும்-
தாங்குவது-
தற்காப்பு கலை-
கற்பதற்கு!

முழங்காலிலும்-
முழங்கையிலும்-
காயங்கள்-
மிதிவண்டி-
பயில்வதற்கு!

வலியும் வேதனையும்-
தாங்கி கொள்வது-
பளு தூக்கும்-
வீரனாவதற்கு!

விமர்சனங்களையும்-
வீண் விவாதங்களையும்-
கண்டு கொள்ளாதது-
"இலக்கை "-
அடைவதற்கு!

பருவகாலத்தில்-
"படும் பாடு"-
பக்குவமாய் -
வாழ்வதற்கு!

ஒரு மாத கால-
நோன்பு இருப்பது-
பிற மக்களிடம்-
பரிவோடு நடந்திடவும்-
இறைவனுக்கு நன்றியுடன்-
நடப்பதற்கு!

ஒவ்வொரு முன்னோட்டம்-
அடைவதும்-
பாடம் படித்து கொள்வதும்-
வாழ்வில்-
முன்னேறுவதற்கு!!

17 comments:

  1. //
    விமர்சனங்களையும்-
    வீண் விவாதங்களையும்-
    கண்டு கொள்ளாதது-
    "இலக்கை "-
    அடைவதற்கு!
    //

    அருமையான வரிகள் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. suvadukal!

      eppadi ungalaal elloraiyum urchaaka paduththum
      pinnoottam ida mudikirathu!


      mikka nantri !
      nanpare!

      Delete
  2. // ஒவ்வொரு முன்னோட்டம்-
    அடைவதும்-
    பாடம் படித்து கொள்வதும்-
    வாழ்வில்-
    முன்னேறுவதற்கு!! //

    அருமையான வரிகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  3. உற்சாகப்படுத்தும் வரிகள்...

    சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. சகோ என்ன அழகான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அழகிய கவிதையை படைத்துவிட்டீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  5. முன்னோட்டங்கள் நமக்கு வாழ்கையை கற்பிக்கும் பாடங்கள்!....... அருமை சகோ

    ReplyDelete
  6. அனுபவங்கள் வாழ்க்கை பாடம் என்று சொல்லும் அருமையான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  7. ஆம்... சோதனைகள் வாழ்வின்
    வெற்றிப் படிக்கட்டுக்கள் தான்.
    இருளுக்குப் பின் ஒளி என உணர்ந்தால்
    வேதனையின் வலி தெரியாது.
    இது தான் வாழ்வின் சூட்சுமம்.
    இதை அழகாக உணர்த்துகிறது
    ' முன்னோட்டம் ' சீனி.

    ReplyDelete
  8. அருமையான வரிகள் அண்ணா! வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் எத்தனை அர்த்தங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கிறது! அனைத்தையும் பாடமாய் எடுத்துக்கொள்ளும் வரை நமது முன்னேற்றத்திற்கு நல்லது!

    ReplyDelete
  9. நல்லதைச் செய்துகொண்டு நகர்ந்துகொண்டேயிருப்போம்.சமூகம் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதோ சொல்லித் திட்டும்.விட்டுத் தள்ளுங்கோ !

    ReplyDelete