Monday 20 August 2012

மூத்தவர்கள்!



மூத்தவர்கள்-
கடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!

இளைய சமூகம்-
மறந்து விட்ட-
அறிய புத்தகங்கள்!

அவசர கதி ஓட்டம்-
சுறு சுறுப்பா!?

அவசியமான ஓட்டமே-
அவசியமப்பா!!

ஓடி உழைத்து-
ஓடானவர்கள் -
பெரியவர்கள்!

அவர்களிடம்-
கொட்டி கிடக்குது-
அனுபவங்கள்!

அன்றொரு நாள்-
கிளம்பியது -
ஒரு கூட்டம்-
 புனித யாத்திரைக்கு !

தடை விதித்தான்-
அரசன்-
பெரியவங்களுக்கு!

நெடுந்தூர பயணத்திற்கு-
அசௌகரியம் ஏற்படக்கூடாது-
என்பதற்கு!

பயணத்தின்-
நடுவில் !

தண்ணீர்-
தீர்ந்தது!

நாக்கு-
வரண்டது!

பாலைவனமோ-
அதை விட வறட்சி-
கொண்டது!

தேடினார்கள்!
தேடினார்கள்!

தெரியவே -
இல்லை!
நீர் நிலை!

ஒரு இளைஞன் -
கூறினான்-
ஆலோசனை!

அங்கு கிடைத்தது-
நீர் சுனை!

அழைத்து வரபட்டான்-
அரசனிடம்!

கேட்க பட்டது-
கேள்விகள்-
அவனிடம்!

முதலில் மன்னிப்பை-
பெற்று கொண்டான்!

சாமான்களின் நடுவில்-
ஒளிந்து வந்தார்-
என் தகப்பன்!

தடையின்-
காரணத்தை-
கேட்டறிந்தார்!

பிறகு வானத்தை-
பார்த்தார்!

'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!

அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!

அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது.....

அது எப்படின்னு-
விடைகாண!
வாருங்கள்!

இதை சொடுக்குங்கள்!

வலைச்சரத்தில் இன்றைய  பதிவு!





20 comments:

  1. மூத்தவர்களின் ஆசிர்வாதத்தோடு ஆரம்பித்துள்ளீர்கள்... வரிகள் அருமை...
    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல கவிதை
    வாழ்த்துகள்


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள் சகோ. மூத்தவர்களின் ஆசிர்வாதம் தான் முதலில் இருக்க வேண்டும் என்ற தங்கள் எண்ணத்திற்காக.

    ReplyDelete
  4. அருமையான கவிதை நண்பரே!

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  6. சிறுகதை சிறப்பான கவிதை ஆகி வலைச்சரத்திற்கு அழைத்த விதம் அருமை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  7. மூத்தவர்கள்-
    கடந்த காலத்தின்-
    பெட்டகங்கள்!

    இளைய சமூகம்-
    மறந்து விட்ட-
    அறிய புத்தகங்கள்!

    உண்மையான கருத்து.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  8. அழகான கவிதை. அருமையாகவுள்ளது. கதையாக கேள்விப்பட்டதை கவிதையாக விவரித்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  9. //பிறகு வானத்தை-
    பார்த்தார்!

    'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
    கண்டார்!

    அதன்படி இவ்வளவு-
    தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
    என்றுரைத்தார்!

    அதன்படியே-
    தண்ணீர் கிடைத்தது!//

    கேட்ட கதை தான். அனுபவம் பற்றிய அருமையான கதை. தாங்கள் அதை சொன்ன விதமும் அருமை.

    பதிவுலகின் -
    மூத்தவர்கள்!

    அதுதான்-
    முத்துக்கள்!

    1 ரமணி ஐயா!
    2 சென்னை பித்தன் ஐயா!
    3 கோபால கிருஷ்ணன் ஐயா!
    4 பால கணேஷ் அவர்கள்!
    5 அம்பாளடியால்!
    6 புலவர் இராமானுசம் அவர்கள்!
    7 ஹுசைனம்மா அவர்கள்!
    8 ஹேமா அவர்கள்!

    எட்டு முத்துக்களில் என்னையும் ஒருவனாய்க் கோர்த்து முத்து மாலையாக்கியுள்ளது மகிழ்ச்சியாய் உள்ளது.
    மிக்க நன்றி, Mr.SEENI Sir.

    அன்புடன்,
    VGK

    தங்களுடன் நான் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    VGK

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum karuthirkkum-
      viruthu aliththamaikkum mikka nantrikal. ayya!

      Delete
  10. அழகான கவிதை வலைப்பதிவில் பதிவிட்டவைகளை விட ஆசிரியர் பொருப்பின் பின் கவிதைகளில் மாற்றம் தெரிகிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      appidiyaa!?

      ungal varavirkkum karuthirkkum-
      mikka nantri!

      Delete
  11. சிறிய க(வி)தை சீரிய கருத்துக்கள்.யோவ் என்ன மனுசன்யா நீ?தினமும் புதுசு புதுசா எழுதிகிட்டே இருக்கிங்க? நிறைய கற்பனை வளம் ...நானெல்லாம் கவிதை எழுதலாம்னு நினைத்தால் உங்களையெல்லாம் பார்த்து மூடிகிட்டு போயிடுறேன்...தீயா எழுதுறீங்க...

    ReplyDelete
    Replies
    1. satheesh sir!

      periya vaarthaiyellaam vendaam sako!
      naam anaivarum ennangalai pakirkirom...

      ungal aatharavukkum anpukkum-
      mikka nantri!

      Delete