Sunday 5 August 2012

புண்ணான மனசை....



வீட்டிலயும்-
பார்த்தது!

தெருவெங்கும்-
கண்டது!

மறைமுகமாக-
நடக்காத-
ஒன்று!

பந்தாவா-
நடக்கிறது!
இன்று!

எனக்குள்ளும்-
ஆசை துளிர் விட்டது!

ருசித்திட-
ஆசை உந்தி தள்ளியது!

உதவிட மறுத்தான்-
உற்ற நண்பன்!

அப்போதிலிருந்து-
எனக்கு-
அவன்தான்-
கெட்டநண்பன்!

நல்லது சொல்றவந்தானே-
இன்று-
பொல்லாதவன்!

புதிய நட்பு-
வரவு!

என் ஆசைக்கு-
இசைவு!

இடமும் ஆனது-
தேர்வு!

திரை அரங்கம்-
பகல் காட்சி!

"தெரிந்தவர்கள்" வருவது-
குறைவான-
காட்சி!

இடைவேளை -
விடப்பட்டது!

"தேவையானது"-
வாங்கபட்டது!

ஆளுக்கொன்று!
வாயில் வைத்துகொண்டு!

பத்தவைதோம்-
தீக்குச்சியை கொண்டு!

தெரியவில்லை-
அக்குச்சி வாழ்கையை-
எரிப்பது என்று!

முதல் அனுபவம்-
புகை வராமல்-
"புகைச்சல்" வந்தது!

அவனுக்கு-
மூக்கு வழியெல்லாம்-
புகைவந்தது!

விடாமல்-
முயற்சித்தேன்!

இன்று-
விட்டிட முயற்சிக்கிறேன்!

பிஞ்சு இதழ்-
எரிஞ்ச இதழானது!

பளிங்கு சாலையா இருந்த-
பல்லு-
தார் சாலையானது!

கழிவறை வீச்சம்-
வாய் வீச்சம்-
தந்தது!

"புண் பட்ட மனசை-
புகையை விட்டு ஆத்துன்னு-
சொன்னாயங்க!

"புகைச்சி புகைச்சி"-
புண்ணான நெஞ்சோட -
அலையிறாங்க!

புண்ணியவான்களே!

ஒரு புண்ணாக்கும்-
இல்ல !-புகையிலே!

புகைந்துதான் ஆகணுமா-
நம் வாழ்வினிலே!

இப்படிக்கு-
"புகையால"-
புதைந்தவர்கள்!


27 comments:

  1. அர்த்தமுள்ள வரிகளுடன் கூடிய பதிவு நண்பா...

    பந்தாவா-
    நக்கிறது- (நடக்கிறது..?)
    இன்று!

    இப்படித்தான் வருமா அல்லது நடக்கிறது என்று வருமா..?

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      sonnathuthaan sari!

      solliyathukkum-
      vanthathukkum mikka nantri!

      Delete
  2. நவீன நாகரீகம் இதனால் தான் ஆரம்பம் ஆகிறது என்பது பல பேரின் நினைப்பு..

    இதனால் புதைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டு தான் வருகிறது...

    நன்றி…


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. balan sir!

      mikka nantri!

      ungal pathivai iravukkul paduthiduven....

      Delete
  3. பழக்கமில்லாதவன், பாதகம் வரும், பழகாதே என்பதைவிடவும் பழகியவன், பாதிக்கப்பட்டவன் அதைச் சொல்லும்போது அதற்கு வலிமை அதிகம். அருமையான கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  4. --------------------------
    பளிங்கு சாலை
    ------------------------
    தார் சாலை
    ------------------------
    உவமானம் & கருத்து
    மிக அருமை !
    -----------------------

    ReplyDelete
  5. தலையில் கொட்டி இது சரியல்ல என்று சொல்வதை விட
    தோளில் கைபோட்டு இது நல்லாவே இல்லை என்று சொல்வதுபோல
    அழகா சொல்லியிருகீங்க நண்பரே...
    நல்ல விழிப்புணர்வு...

    ReplyDelete
  6. //ஒரு புண்ணாக்கும்-
    இல்ல !-புகையிலே!

    புகைந்துதான் ஆகணுமா-
    நம் வாழ்வினிலே!
    //


    உண்மை நண்பரே... புரிந்து கொண்டால் சரி....

    ReplyDelete
  7. நல்லா சொன்னீங்க போங்க - புகை அரக்கனை அனுபவித்தவனுக்குதான் தெரியும் அதன் வலி

    ReplyDelete
  8. கலக்றீங்க நண்பா... புகைப்பவன் உணர்ந்தால் தானே

    ReplyDelete
  9. உங்கள் வரிகளை படித்தால் நிச்சயம் உணருவார்கள். அருமைங்க.

    ReplyDelete
  10. புண்ணான மனசு....
    பொன்னான கருத்து நண்பரே!

    ReplyDelete
  11. நல்ல தொரு தரமான கவிதை தோழரே ...
    உணரட்டும் நம் நண்பர்கள் ...

    ReplyDelete
  12. அப்பாவை ஞாபகப்படுத்துகிறது.எப்படிச் சொல்லியும் இதுவரை புகைத்தபடிதான் !

    ReplyDelete
  13. அருமையான கவிதை அண்ணா! தங்களோடு மற்றவர்களுக்கும் அது பிரச்சனை என்பதை அறிந்தும் விட முடியாமல் தவிக்கிறார்கள் பலர்! இன்றைய தலைமுறையில் சிலர் தாங்கள் சொன்னவாறு பந்தாவுக்கு பழகி விடமுடியாமல் தடுமாறுகிறார்கள்!

    ReplyDelete
  14. வணக்கம்
    புகை எல்லா ரூபத்திலும் ஒழிக்கப்படவேண்டியது
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete