Monday 3 September 2012

அர்பணிக்கிறேன்....

மரங்களை வெட்டிட -
தடை-
நாட்டிலே!

மனிதர்களை-
வெட்டுவது -
இங்கே குறைவில்லை!

மானை வேட்டையாடினான் -
பரபரப்பு-
செய்தியானானே!

மனிதங்களை-
மாண்டிட செய்தவர்கள்-
பதவிகளிலே!

துரத்தி துரத்தி-
சீரழிக்கபட்டார்கள்!

உயிரோடு-
உருக்குலைக்கபட்டார்கள்!

சொந்த மண்ணிலேயே-
ரத்தம் சிந்தபட்டார்கள்!

இதுக்கா !?-
சுதந்திரத்துக்கு-
நம்முன்னோர்கள்-
சிந்திய ரத்தங்கள்!

காமம் என்பது-
உணர்ச்சி -
அடங்கும்வரை!

கோபம் என்பது-
உணர்ச்சி-
வெளிபடுத்தும்வரை!

உணர்சிகள்-
நாட்கணக்கிலா-
தொடரபடுது!!?

திட்டமிட்ட -
படுகொலையை!-
உணர்சிவசபட்டர்கள்-என்பதை
எப்படி ஏற்பது!!?

காட்டையே-
 திகிலில் ஆழ்த்தும்-
சிங்கத்தின் கர்ஜனை!

"தூங்கி" கிடக்கும்-
சோம்பேறிகளை-
அதட்டி எழுப்பும்-
நீதிக்கான-
போராட்டங்களே!

தண்ணீர் ஓடும்-
வழியே நீந்துபவன்-
சராசரி!

அதனை எதிர்த்து-
நீந்துபவன்-
லட்சியவாதி!

எனக்கென்ன!?-வாழ்பவன்
மூச்சு மட்டும்-
விடுகிறான்!

தன்னால் ஆனதென்ன!?-
யோசிப்பவன்-
சாதித்து விடுகிறான்!

அநீதியை கண்டு-
உன் ரத்தம் கொதித்தால்-
நீயும் நானும்-
சகோதரர்கள் -என்று
சேகுவேரா முழங்கினான்!

நூறாண்டுகள்-
ஆட்டு மந்தையாக-
வாழ்வதை விட-
ஒரு நாள் புலியாக -
வாழ்வது மேல்-என்று
சூளுரைத்தான்-
திப்பு சுல்தான்!

குஜராத் எனும்-
கொலை களத்தில்-
நீதி மலர போராடினார்-
தீஸ்டா செடல்வாட் எனும்-
சகோதரி!

சகோதரியே!
உன் தியாகத்திற்கு-
நன்றி சொல்லிகொள்கிறேன்-
இக்கவிதை வழி!

வருங்கால சரித்திரம்-
சொல்லும் -
உன் பெயரை!

உறமேற்றிட செய்யும்-
வரும் தலைமுறையை!



33 comments:

  1. எது எதுவரை என்பதும்... அர்பணிப்பு வரிகளும் அருமை...

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// தன்னால் ஆனதென்ன!?-
    யோசிப்பவன்-
    சாதித்து விடுகிறான்! ///

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரிகளும் சுளீர் -
    மூளை இருந்தும் மூணு வேலை சோறு திண்ணும், சிந்திக்க மறுக்கும் ஜென்மங்களை என்ன வென்று சொல்வது....

    ReplyDelete
  3. நல்லா உறைக்கும்படி சொல்லீட்டீங்க நண்பா

    ReplyDelete
  4. அருமையான சொல்லாடல் & அர்ப்பணிப்பு !
    அறிந்து கொண்டேன் சீனி இக்கவிதை மூலமாக !

    ReplyDelete
  5. அருமையாக சொல்லி இருக்கீங்க சகோ

    ReplyDelete
  6. அருமையான அர்பணிப்புக் கவிதை.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  7. அருமையான கவிதை...
    Good Verses with strong revolutionary concepts..
    வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  8. நல்ல கவிதை நண்பா!

    ReplyDelete
  9. அருமையான வரிகள்.
    பொருள் பொதிந்த வரிகள்.
    அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    அர்பணிப்புக் கவிதை.
    தொடருங்கள் நண்பரே.


    ReplyDelete
  10. நூறாண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட புலியாக ஒருநாள் வாழ்வது மேல்! சிறப்பான கருத்து!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  11. பொருள் பொதிந்த வரிகள்....

    நல்ல கவிதை படைப்பு.

    ReplyDelete
  12. //எனக்கென்ன!?-வாழ்பவன்
    மூச்சு மட்டும்-
    விடுகிறான்!

    தன்னால் ஆனதென்ன!?-
    யோசிப்பவன்-
    சாதித்து விடுகிறான்!
    //
    வரிகளை ரசித்தேன்...!

    வாழ்த்துகள்...!

    - இப்படிக்கு அனீஷ் ஜெ...

    ReplyDelete
  13. தீஸ்டா செடல்வாட் எனும் சகோதரி பற்றி தங்கள் கவிதை மூலமே அறிந்தேன். அறியச் செய்தமைக்கு நன்றி சீனி. ஒவ்வொரு உணர்விற்குமான எல்லைகளை வகுத்து அருமையான கவியர்ப்பணம் அமைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. அழகான கவி படைப்பு

    அருமை....

    ReplyDelete
    Replies
    1. esthar sako!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete
  15. Replies
    1. punnakai!

      ungalmuthal varavukku mikka nantri!

      Delete
  16. காமம் என்பது-
    உணர்ச்சி -
    அடங்கும்வரை!

    கோபம் என்பது-
    உணர்ச்சி-
    வெளிபடுத்தும்வரை!

    //////////////////////////

    அர்த்தமுள்ள வரிகள் நண்பா... சில பதிவுகளை தவறவிட்டுள்ளேன்..படித்துவிடுகிறேன்

    ReplyDelete
  17. சீனி...உங்கள் ஆதங்கங்களை அப்படியே கொட்டி வைக்கிறீர்கள்.அதிர்ந்துபோகிறோம் !

    ReplyDelete