Friday 16 November 2012

வானும்- நானும்!

கொட்டி கிடக்கும்-
நட்சத்திரங்கள்!

படைத்தவனின்-
சித்திரங்கள்!

வளரும்-
தேயும்!

மறையும்-
தெரியும்-
நிலவு!

இது போன்றே-
நியாங்களை-
காணுது-
உலகு!

நிரந்தரமில்லை-
சந்திர கிரகணம்!

தண்டனை-
பெறாமல்-
இருப்பதில்லை-
அநியாயகாரனின்-
தலை கணம்!

அத்தனையும்-
அண்ணாந்து-
பார்க்கும்-
வானை!

உயரத்தில்-
இருந்தாலும்-
பணிந்தே பார்க்குது-
பூமிதனை!

அது போலவே-
தகுதி உள்ளவனுக்கு-
பதவி -
கிடைத்தாலும்-
பணிந்து-
நடக்கிறான்!

தராதாரம்-
தெரியாதவனுக்கு-
அதிகாரம் -
கிடைத்தால்-
"ஆடி" தொலைகிறான்!

சூரியன்-
மெல்ல-
மெல்ல-
சூடேற்றுது!

யார் ஆண்டாலும்-
என் தேச-
மக்களின்-
வயிறோ -
பசியால்-
காயுது!

பெத்தபுள்ள-
"அள்ளி கொண்டு"-
வந்தாலும்-
"அல்லக்கையாக"-
வந்தாலும்-
மாறாது-
தாய் பாசம்!

வாழ்வாதாரம் தேடி-
"வாக்கப்பட்டு"-
தேசங்கள் -
கடந்து போனாலும்-
பிறந்த மண்ணை-
நினைவூட்டும்-
வானம்!

வானம்-
எத்தனையோ-
தத்துவங்கள்-
தந்து கொண்டிருக்கிறது!

நமது-(மனிதர்கள்)
வாழ்வோ-
பரபரப்பில் (பிசி)-
தொலைந்து-
கொண்டிருக்கிறது...!!





6 comments:

  1. துணிவுடன்
    பணிவும்
    கனிவும்

    இணைந்துவிட்டால்
    வெற்றி நமதே...

    ReplyDelete
  2. பல சிந்தனை வரிகள்...

    முடிவிலும் உண்மை வரிகள்...

    ReplyDelete
  3. வானம் எப்போது அப்படியேதான்.மனிதர் நாம்தான் பறக்கத் தொடங்கிவிட்டோம் பணம்தேடி !

    ReplyDelete
  4. //பெத்தபுள்ள-
    "அள்ளி கொண்டு"-
    வந்தாலும்-
    "அல்லக்கையாக"-
    வந்தாலும்-
    மாறாது-
    தாய் பாசம்!//

    உண்மை. சிறப்பான கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. வானம்-
    எத்தனையோ-
    தத்துவங்கள்-
    தந்து கொண்டிருக்கிறது!

    நமது-(மனிதர்கள்)
    வாழ்வோ-
    பரபரப்பில் (பிசி)-
    தொலைந்து-
    கொண்டிருக்கிறது...!!//

    பரபரப்பான வாழ்வில் நாம் தொலைத்தவை ஏராளம்.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete