Friday 9 November 2012

எனக்கெல்லாம்.....!!

தப்பாக-
ஒன்னும்-
சொல்லவில்லை!

தவறாக-
நினைத்தாளோ-
தெரியவில்லை!

இதுவரைக்கும்-
தவிப்பதுதான்-
என்-
நிலை!

சொன்னது-
சுட்டிருக்குமோ!?

இல்லை-
முள்ளாக-
குத்தி இருக்குமோ!?

"அவுகளை-"
பார்க்கும்போதெல்லாம்-
அந்த-
எண்ணம் வரும்!

"அவுக"-
போன பிறகுதான்-
சொல்லலையே-
என-
நினைவு -
வரும்!

ஒரு-
நீண்ட-
இடைவெளி!

அவுகளை-
கண்டேன்-
தெருவழி!

குளிர்ந்து-
என் -
நெஞ்சு குழி!

என்னை-
பார்த்தாக!
சிரிச்சாக!

அருகே-
போனேன்!

"என் உம்மாவ-
மாதிரியே-
இருக்கீக!-என
சொன்னேன்!

என்ன-
நினைத்தாங்களோ-
தெரியல!

அக்கணம்-
கண்ணீர் மல்கியதை-
மறைக்க-
முடியல!

என்னை போல-
மகன் இல்லையேனு-
நினைத்தாங்களோ!?

இவனெல்லாம்-
இரக்கம் படும்-
அளவுக்கு-
என் நிலைமையா-என
நினைத்தாங்களோ!?

நல்லது தானடா!
நல்லது தானடா!-என்று
சொல்லி விட்டு-
சென்றார்கள்!

என் பதிலை-
எதிர்பாராமலே-
சென்று விட்டார்கள்!

ஒரு துளி-
கண்ணீருக்கே-
அர்த்தம் தெரியவில்லை-
எனக்கு!

அப்படிஎன்றால்-
எனக்கும்-
என்னை போன்றவர்களுக்கும்-
என்ன-
அறிவு-
இருக்கும்!?

உணர்வுகள்-
பல எண்ணங்களை-
பகிர்ந்து-
போகின்றது!

அதை-
எழுத்தில்-
வடித்திட-
முனைகளில்-
மொழிகளும்-
தோற்று-
விடுகின்றது!




14 comments:

  1. அவர்களின் உண்மையான நிலையை / மனதை யார் அறிவார்...?

    உங்களின் கவிதையும் பல எண்ணங்களை பகிர்ந்து போகிறது...

    ReplyDelete
    Replies
    1. balan sako!

      thodarum anpirkku mikka nantri!

      Delete
  2. உண்மைதான் எண்ணங்ளை வெளிப்படுத்துவதில் எழுத்தின் பங்கு மிக அவசியம்.....
    ரசித்தேன்

    ReplyDelete
  3. எழுத்து விதைகள் விதைக்கப்படுகிறபொழுது
    செழித்து வளர்வது
    தனிமனிதனல்ல..
    ஒரு சமுதாயம்'' என்ற 'மு.மேத்தா' வின் வரிகள்
    நினைவுக்கு வருகின்றன
    உங்கள் கவி வரிகளை வாசிக்கிறபோது.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      maasha allah!

      ungal azhakiya pinnootttathirkku mikka nantri!

      Delete
  4. காதல் கவிதை போன்று தோன்றிய கவிதையை அற்புதமாக அமைத்து உளீர்கள் வாழ்த்துக்கள் சீனி

    ReplyDelete
  5. உணர்வுகளை வார்த்தைகளால் நிரப்ப முடியுமோ?

    ReplyDelete
    Replies
    1. muththarasu!


      mudiyaleye......

      ungal karuthukku mikka nantri!

      Delete
  6. உணர்ச்சிமிக்க வரிகள்..
    அருமை..

    ReplyDelete
  7. என்னமோ மனசில் பாரமாகப் பட்டது வரிகள்.உணர்வை அப்படியே வடித்த விதம் அருமை சீனி !

    தவறவிட்ட உங்கள் அத்தனை கவிதைகளையும் படிக்கவேணும் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      nalla irukkiyalaa...


      ungal karuthukku mikka nantri!

      Delete
  8. பல சமயங்களில் உணர்வினை வார்த்தைகளில் வடிக்க முடிவதில்லை....

    சிறப்பான கவிதை.

    ReplyDelete