Tuesday 14 May 2013

பெண்ணினம்...!(18)

"பெரும் கடன்காரர்கள்"-
சாவதில்லை!

அவங்களுக்கு-
கடன் கொடுத்த-
வங்கியாளர்களும்-
சாவதில்லை!

ஆனால்-
விவசாயிகள்-
தற்கொலைகளை-
தடுக்க முடியவில்லை!

காரணம்-
விவசாயிகளுக்கு-
மானத்தை விட-
வேறொன்றும்-
பெரிதில்லை!

இப்படியாக சொன்ன -
நம்மாழ்வார் அவர்களின் -
வார்த்தைகளில்-
வலி இல்லாமலில்லை!

மண்ணும்-
அதன் வாசமும்-
பிரித்திட இயலாது!

ஆனால்-
இன்று மானமோ-
வியாபாரமானது!

இன்றைக்கு-
கடைசி காட்சி-
"கிளு கிளு" காட்சிகள்-என
ஒட்டபடுவது!

"பல்லை விளக்கி"-
ஊதினாலே-
மயங்கிடுவதாக-
காட்டபடுவது!

குளியல் சலவை கட்டிக்கு-(சோப்)
குறைந்த உடையுடன்-
குளித்து காட்டுவது!

மது புட்டியுடன்-
அறிவிப்பு பலகையில்-
மதுவுடன்-
நிற்பது!

எல்லாம்-
காட்சியிலும்-
மாது!

மோகத்திற்கு-
பெண்ணாக!

பெண்ணென்றால்-
மோக பொருளாக!

சித்தரிக்கிறாக!

இப்படியாக-
பிஞ்சு மனதில்-
நஞ்சையும்!

பருவ வயதினரிடம்-
இன்னும் இன்னும்-
காம வெறியை ஊற்றியும்!

நாறிடும் செயல்களை-
இன்றோ-
உலகறியும்!

(தொடரும்...)

தொடர்புடைய இடுகை...

பெண்மை.....

// நம்மாழ்வார் கடன்காரராக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அதனை மறைத்தே எழுதியுள்ளேன்//

5 comments:

  1. யதார்த்தமாக கொண்டு செல்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மது புட்டியுடன்-
    அறிவிப்பு பலகையில்-
    மதுவுடன்-
    நிற்பது!

    எல்லாம்-
    காட்சியிலும்-
    மாது!
    பெண்ணினத்தை இழிவு படுத்தும் செய்கைகள் யாரை நோவது ?

    ReplyDelete
  3. போகப்பொருளாக காட்சிப்படுத்தும் நிலையைச் சொல்லி அருமையாக கவிதை .தொடருங்கள் தொடர்கின்றேன்!

    ReplyDelete
  4. நம்மாழ்வாரின் கூற்று உண்மைதான்! பெண்ணினம் குறித்த அருமையான தொடர்பதிவு! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete