Monday 30 July 2012

யார் பிணங்கள்....!?



கும்பகோணத்தில்-
கொடூர சம்பவம்-
நடந்தேறியது!

ஒரு "பூவின்" மீது-
பேருந்து-
ஏறி இறங்கியது!

"தீர்ப்பு" சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகள்-
எரிப்பு!

"கருத்து கணிப்பு"-
வெளியிட்டதுக்கு-
ஊழியர்களோட-
எரிப்பு!

இத்தகைய தொண்டர்கள்-
கொண்ட கட்சிகள் -
மாறி மாறி ஆளும்-
அரசியல் நடப்பு!

"ரத்த யாத்திரை"-
புகழ்!

"ரத்த காட்டேரி"-
புகழ்!

"இதுகளுக்கு"-
நாட்டை ஆளும்-
ஆசைகள்!

கணிக்கலாம்-
இவ்வாறு-
யாரால் நடந்தது-
அதிக கொலைகள்!

அவருக்கே கொடுக்கலாம்-
"சீட்டுகள்"!

யாரோ செய்த பாவத்திற்கு-
யாரையோ கொல்லும்-
பாவிகள்!

ஆயிரக்கணக்கில்-
கொலைகள் "பார்த்தும்"-
பதவி ஆசைகொண்ட-
படுபாவிகள்!

எத்தனை-
போலி தாக்குதல்கள்!

உயிர் போன பிறகே-
விசாரணைகள்!

இருந்தது-
முள்ளி வாய்க்காலாய்!

மாறியது-
கொலைகளின் கால்வாயாய்!

காஷ்மீரத்து மக்கள்-
காட்டு மிராண்டி-
அடக்குமுறைகள்!

ஆண் பெண்-
நட்பை பயன்படுத்தி-
"நாசம்"செய்யும்-
நாய்கள்!

பெண்களின் அங்கங்களை-
படம் பிடித்து-
பகிர்ந்து கொள்ளும்-
கொடூரர்கள்!

உலகில் -
பசி தெரியாமல் -
சில நூறு பேர்கள்!

உணவே -
தெரியாதவர்களோ-
பல கோடிகள்!

அகிலத்தில்-
அறிவியல் வளர்ச்சிக்கு-
பஞ்சமில்லை!

அன்புக்குத்தான்-
இடமில்லை!

அணு குண்டுகளுக்கோ-
குறைவில்லை!

இத்தனையவும் பார்த்து -
உணர்வற்று இருப்பவர்கள்-
உயிருள்ளவர்களா!?

உணர்ச்சியற்று-
உணர்வற்று கிடக்கும்-
நாங்கள் பிணங்களா!?

இப்படியெல்லாம்-
கேட்பவர்கள்!

மயான காட்டில்-
அநியாயமாக கொல்லப்பட்டு-
"அடக்கப்பட்டவர்கள்!"



18 comments:

  1. இந்த "நவீன" உலகில் எந்தளவு மனித நேயம் செத்து விட்டது என்பதை உணர்த்தும் வரிகள்.

    முடிவில் சாட்டை அடி வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. sakotharaa!

      udanadi varavirkku mikka nantrikal!

      Delete
  2. கணிக்கலாம்-
    இவ்வாறு-
    யாரால் நடந்தது-
    அதிக கொலைகள்!
    >>>
    இதுப்போல எங்க ஆட்சில இவ்வளவு உயிர் போச்சு, உங்க ஆட்சில இவ்வ்ளாவு உயிர் போச்சுன்னு “அவங்கலாம்” அடிச்சுக்கும் நாள் வெகு தூரத்துல இல்ல சகோ.

    ReplyDelete
  3. ///
    பெண்களின் அங்கங்களை-
    படம் பிடித்து-
    பகிர்ந்து கொள்ளும்-
    கொடூரர்கள்!
    ///

    இந்த கயவாளிகளை கொடூரர்கள் என்ற எல்லைக்குள் கூட கொண்டு வர இயலாது!

    ReplyDelete
  4. உணர்ச்சியற்று-
    உணர்வற்று கிடக்கும்-
    நாங்கள் பிணங்களா!?

    இப்படியெல்லாம்-
    கேட்பவர்கள்!

    மயான காட்டில்-
    அநியாயமாக கொல்லப்பட்டு-
    "அடக்கப்பட்டவர்கள்!"

    ஆமாம் சீனி... அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் தான்
    “வாக்கு“ என்ற வாக்கரிசி போட்ட எல்லோருமே...

    ReplyDelete
  5. arouna!

    ungal vari innum kopam koppalikkirathu .....
    mikka nantri !

    ReplyDelete
  6. அவலங்களை வரிகளில் அட்டவணைப்படுத்திவிட்டோம் அதனை தடுக்க வழி என்ன? சிந்திப்பார்களா?

    ReplyDelete
  7. வேதனை மிகுந்ததும் சமூக அக்கரை நிறைந்ததுமான வரிகள் நண்பா...
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அவலமான முடிதல்கள் பற்றிய ஆழமான வரிகள்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

    மயங்காதிரு என் மனமே..!!!!

    ReplyDelete
  9. அரசியலில் உயிரை யார் மதிக்கிறார்கள்.எத்தனை உயிர்களை அழித்து அடுத்த கதிரை பிடிக்கும் ராட்சதகர்கள் !

    ReplyDelete