Sunday 23 September 2012

அறிவது என்னவென்றால்...

தேனீக்கள்-
தேனை சேகரிப்பது!

மேகங்கள்-
தண்ணீரை சுமப்பது!

பட்டு பூச்சிகள்-
பட்டு நூற்கள்-
தருவது!

மரங்கள்-
கனிகளை-
தருவது!

செடிகள்-
பூக்கள் -
தருவது!

இறப்பு நிச்சயம்-என
தெரிந்தும்-
ராணி தேனீ இடம்-
"உறவில்"ஆண் தேனீ-
ஈடுபடுவது!

தன்னுள்-
கடல்-
உணவுகளை-
வைத்திருப்பது!

இன்னும் எல்லை-
மீறாமல்-
"பொறுமை"காப்பது!

பூமி நம்மை-
சுமப்பது!

வேதனை என-
தெரிந்தே -தாய்
கருவை சுமப்பது!

பிராண வாயுவை-
மரங்கள் தருவது!

இன்னும்-
எத்தனையோ-
உள்ளது!

அதை அடுக்கிட-
எவராலும்-
முடியாது!

தனக்கு -
உபயோகம் இல்லாததை-
"இவைகள்"ஏன்-
செய்கிறது!

அவையெல்லாம்-
மனிதர்களுக்கு-
பிரயோஜனம் ஆகிறது!

"அறிவுடையோருக்கு-
எத்தனையோ-
அத்தாட்சிகள் உள்ளது"-
இறை வாக்கு!

அத்தாட்சிகளை-
அறிய கூடிய-பார்வைதான்
இல்லையோ-நமக்கு!?

படைப்புகளின்-
"தன்மையை-"
 அறிய முயல்வது-
விஞ்ஞானம் !

படைத்தவனின்-
வல்லமையை -அறிவதே
மெய்ஞானம் !




29 comments:

  1. இந்த புவியில் இயற்கையால் படைக்கபட்ட அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று உதவியாகத்தான் இருக்கிறது...மனிதனை தவிர! :(

    ReplyDelete
    Replies
    1. suvadukal!

      udanadi varavirkku-
      mikka nantrikal!

      Delete
  2. படைப்புகளின்-
    "தன்மையை-"
    அறிய முயல்வது-
    விஞ்ஞானம் !

    படைத்தவனின்-
    வல்லமையை -அறிவதே
    மெய்ஞானம் !

    அருமையான விளக்கம்

    ReplyDelete
  3. மெய்ஞானம் பற்றிய விளக்கம் அருமை, படைத்தவனை அறிய வின்கனம் முயல்கிறது, மெய்ஞானம் உதவுகிறது

    ReplyDelete
  4. படைப்புகளின்-
    "தன்மையை-"
    அறிய முயல்வது-
    விஞ்ஞானம் !

    படைத்தவனின்-
    வல்லமையை -அறிவதே
    மெய்ஞானம் !//அருமையான வரிகள்

    ReplyDelete
  5. மிகவும் அருமையான வரிகள்...இன்னும் நிறைய எழுதுங்கள்..வாழ்த்துக்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  6. மிக அருமையான கவிதை வரிகள் ....வாழ்த்துகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. படைப்புகளின்-
    "தன்மையை-"
    அறிய முயல்வது-
    விஞ்ஞானம் !

    படைத்தவனின்-
    வல்லமையை -அறிவதே
    மெய்ஞானம் ! முடித்த விதம் அழகு.

    ReplyDelete
  8. முடிவில் இரண்டு பத்திகளும் சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. விஞ்ஞானம் - அஞ்ஞானம் ... வினக்கத்துடன் அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள்
    அருமையான விளக்கங்கள் அடங்கிய கவிதை

    ReplyDelete
  11. படைத்தவனை அறியும் அவசியத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  12. //படைத்தவனின்-
    வல்லமையை -அறிவதே
    மெய்ஞானம் !//
    உண்மை
    நன்றி

    ReplyDelete
  13. எல்லா படைப்புகளும் ஒவொன்று தருகிறது மனிதன் எல்லாத்துக்கும் வாழ்வு கொடுக்கின்றான்

    ReplyDelete
    Replies
    1. mohan p!

      mikka nantri!

      ungal blogspot address pakiravum...

      Delete
  14. அன்புள்ள சீனி
    அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete
  15. ம்ம் நல்ல கவிதை.............

    ReplyDelete
  16. இயற்கைக்கு இருக்கும் பொறுமையும் நல்லெண்ணமும் மனிதனுக்கெங்கே சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      kadaisi paththithaan-
      naan solla vanthathu!

      mikka nantri!

      ungal varukaikku...

      Delete