Thursday 27 September 2012

நடை பாதை..

என்னவளே!
உன் வீட்டை-
சுற்றுவதே-என்
வாடிக்கையானது!

நீயோ!-
ஒளிந்திடுவதே-
தொடர்கதையானது!

தூணுக்கு-
பின்னால்-
மறைந்திருப்பாய்!

தூணின் நிழலின்-
பருமனால்-
"தெரிந்திடுவாய்"!

உன் தாய்-
முதுகு புறம்-
புதைந்து கொள்வாய்!

நான் போகும் -
பாதையெல்லாம்-
புதை குழிகளை-
காண செய்தாய்!

தோழிகளோடு-
அளவாவி இருப்பாய்!

நான் வருவது-
அறிந்தால்-
அமுதவாய் -
அடைத்திடுவாய்!

வீட்டுக்குள்ளே-
உன் காலடி-
சத்தம்!

போகும் -
எனது-
பிடரியை -
தட்டும்!

நீ!-
"குத்த வைக்கும்"-
திண்ணையும்!

வெண்ணையை -
பார்ப்பது போல்-
பார்க்கும்-
என்னையும்!

அழகே!
"போக்கத்தவன்"-என
என்னை ஒதுக்கினாயோ!?

இல்லை-
"பொழச்சிட்டு "போறான்-என
பதுங்கினாயோ !?

தன் நிழலை பார்த்து-
கிணற்றில் விழுந்த-
சிங்கத்தை போல!

ஆம்பிள்ளை சிங்கம்-என
அலட்டிய என்னை-
ஆட்டங்கான செய்து விட்டாய்-
உன் அலட்சியத்தாலே!

வஞ்சி நீ!
வெறுத்ததால்-
வாழ்கை "முடிப்பவனல்ல-"
நான்!

ஒரு அச்சு பிழை-என்பதால்
முழு புத்தகத்தை-
எரிப்பவன் அல்ல-
நான்!

பூக்களின் ரசிப்பவர்கள்-
மத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!

படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!

என் பார்வை-
சற்று வித்தியாசமானது!

அதுதான்-
எனக்கு பாடங்களை-
தருகிறது!

நடை முறை-
வலிகளைஎல்லாம்-
வேதனையாக-
பார்த்திருந்தேன்!

"நடை பாதை"-
"நேச வலியால்-
வலிகளையும்-
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!




22 comments:

  1. வலிகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டால் வலி ஏது!

    நல்ல கவிதை சீனி.

    ReplyDelete
  2. பூக்களின் ரசிப்பவர்கள்-
    மத்தியில்-
    வேர்களின் பொறுமையை-
    நினைப்பேன்!

    படைப்புகளின்-
    அதிசயங்கள் எழுதுபவர்கள்-
    மத்தியில்-
    படைத்தவனின்-
    வல்லமையை நினைப்பேன்!//arumai arumai...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கவிதை...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  4. மிக அருமையான கவிதை வரிகள்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. வலிகளையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  6. அருமை... அருமை... சிறப்பான வரிகள்...

    ReplyDelete
  7. படைத்தவனின்-
    வல்லமையை நினைப்பேன்!
    >>
    வித்தியாசமான ஆள்தான் சகோ நீங்க.

    ReplyDelete
  8. //பூக்களின் ரசிப்பவர்கள்-
    மத்தியில்-
    வேர்களின் பொறுமையை-
    நினைப்பேன்!//


    அருமையான வரிகள்!!

    ReplyDelete
    Replies
    1. mano!
      ungal muthal varukaikku-
      mikka
      nantri!

      Delete
  9. நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete
  10. ஆஹா.....ரொம்ப வித்தியாசம் அனைத்து வரிகளையும் ரசிச்சுப் படிச்சேன் நண்பா

    ReplyDelete
  11. கவிதை முழுதுமே எத்தனை உவமானங்கள் சொல்லி கவிதையை வலிமைப்படுத்துறீங்கள்.அருமை சீனி !

    ReplyDelete