Sunday 9 September 2012

தவிர்ப்போம்.....

தடுக்கலாம்-
கைது செய்யலாம்-
விசாரிக்கலாம்-
தண்டிக்கலாம்-
தப்பிருந்தால்!

எல்லை தாண்டி-
மீன் பிடித்தால்!!

சுடனுமா!?-
துப்பாக்கி உபயோகிக்க-
முடிகிறதா !?-என
சந்தேகம் வந்தால்!!

ஆயுதங்களுடன் -
ஆயுதம் மோதினால்-
போர்க்களம்!

ஆயுதமும்-
வெற்றுடலும் மோதினால்-
அது அழிச்சாட்டியம்!

தண்டிக்க படவேண்டியவர்கள்-
சுட்டவர்கள்!

தாக்கபட்டிருக்க -
கூடாது-
சுற்றுலா வந்தவர்கள்!

கலவர தீ -
மூண்டது-
அணையால!

தீர்வு கண்டிருக்கலாம்-
மாநில அரசுகளால!

அரசுகள் -
அடித்து கொள்ள செய்தது-
மக்களோடு மக்களாக!

"என் உடல் பொருள்-
ஆவியை தமிழுக்கும்-
தமிழருக்கும்-
கொடுப்பது முறையல்லவா!?-என
வரிகளுக்கு வாயசைத்து-
நடிக்கிறார்கள்!

நம்மக்கள் -
துயர் சம்பவங்களின்போது-
என்ன பண்ணி -
கிழித்தார்கள்!

தப்பு -
"அவர்களின் "மீதா!?

"அவர்கள்" படங்களுக்கு-
அடித்து கொள்ளும்
அசிங்கங்களின் மீதா!?

ஓ!
"வேஷதாரிகளே-"
தர வேண்டாம்-
பிச்சை எடுத்து!

கொடுக்கலாமே-
மிச்சம் உள்ளத்தில்-
பிச்சி எடுத்து!!

கேரளாவில் உள்ள-
முஹம்மது குட்டிக்கு-(மம்முட்டி)
கசிந்திருக்கிறது-
இரக்கம்!

சென்னையில -
இருப்பவங்களுக்கு-
"மரத்து" போனதோ-
அசிங்கம்!

ஒருத்தனின் தவறு-
ஒரு இனத்தையே-
சாடலாகாது!

கொஞ்சம் நடுநிலையாக-
சிந்திப்பதே-
பகுத்தறிவானது!

இத்தைகைய சம்பவங்கள்-
சில வற்றை-
உணர்த்தி போனது!

ஆம்-
விஷத்திலும்-
மருந்துண்டு!

தேனிலும்-
விஷமுண்டு!

வளர்ப்போம்-
தொலை நோக்கு-
பார்வையை!

தவிர்ப்போம்-
குறுகிய மனப்பான்மையை!




23 comments:

  1. நிகழ் கால நிகழ்வுகளை உடன்
    மனம் தொட்டுப்போகும் கவிதையாக்கித் தரும்
    தங்கள் திறன் அதிக பிரமிப்பூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்திய திரு நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நடக்கும்
    அத்தனை நாசகார வேலைகளையும்,
    படம் பிடித்துள்ளீர்கள்..............

    கவிதை அருமை............................

    ReplyDelete
  3. யோவ் எப்படிய்யா தினமும கவித எழுதுறிங்க? என்னால தொடர கஷ்டமா இருக்குயா...நல்ல செயல்களை(மம்முட்டி) கூடவே சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. satish!

      appudiyaa!?

      ungal varavukku mikka nantri!

      Delete
  4. இறுதி வரிகளில் இடம் பிடித்தது கண்கள்.

    ReplyDelete
  5. யார் யார் வேஷம் போடுபவர்கள் என்று தெரிந்து விடுகிறது... அருமையாக முடித்துள்ளீர்கள்... நன்றி...

    ReplyDelete
  6. தினம் தினம் கவிதை தந்து அசத்தும் சகோ சீனிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சகோ உங்கள் தங்லீஸ் படிக்க சற்று மெனக்கெட வேண்டியுள்ளது.கமண்டுக்கு பதில் போட இதனைபயன் படுத்திக்கொள்ளுங்கள்.

    http://tamileditor.org/

    ReplyDelete
    Replies
    1. sadiga sako!

      unmaithaan naan mobilil inaiyathai payanpaduthukiren!

      en thalathil pinnoottam
      ida konjam tamilil type seyya kasdam!

      mannikkavum!

      Delete
  8. சிறந்த பதிவாக்கம் தலைவரே ...
    எண்ணத்தை கொஞ்சம் விரிவாக்கம் செய்ய வேண்டும் ..

    ReplyDelete
  9. பாதி மட்டும்தான் உள்ளதா ?
    எண்ணத்தை கொஞ்சம் விரிவாக்கம் செய்ய வேண்டும் , நம் முன் இருக்கும் அலங்கார திரையை , நடிகனின் போர்வையை களைந்து அவன் பிழைப்புக்கு அவன் நடிக்கிறான் , நம் பிழைப்புக்கு நாம் ஓடியாடி வேலை செய்யவேண்டும் என்பதை உணரவேண்டும் , அதற்கு எதுவாக இருக்கும் இந்த பதிவு...

    ReplyDelete
    Replies
    1. arasan sako!
      naan nadikarkalin uzhaippai anaiththaiyum-
      makkalukku kodukka solli intha pathivu kidaiyaathu!

      melum-
      ilavasangalai kooda naan virumpaathavan-
      sivakaasi pontra tharunangalil mammitti pontra uthavikal seyyalaame!

      kumpqkona thee sampavathin
      pothu vaakkuruthi koduththa entha nadikanum- ontrum seyya villai!

      avarkalidam naam kaiyenthida villai!
      nam makkal avarkalin pinnaal-
      alaikiraarkale entra aathangam
      thaan!

      muthalvar aasai veru-
      nadippavarukkum-
      nadikka vara iruppavarukkum-
      pathivu neela maakidum enpathaalthaan-
      surukkinen!

      ungal varukaikku mikka nantri!

      Delete
  10. சமூக நடப்புக்களை கவிதையாக்கி தந்தமைக்கு நன்றி! அரசியல் அப்பாவிகளிடம் விளையாடுவதுதான் வேதனை!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  11. //வளர்ப்போம்-
    தொலை நோக்கு-
    பார்வையை!

    தவிர்ப்போம்-
    குறுகிய மனப்பான்மையை!//

    சரியாச் சொன்னீங்க சீனி....

    ReplyDelete
  12. அருமையாய்கூறியுள்ளீர்கள்.//தவிர்ப்போம்-
    குறுகிய மனப்பான்மையை! //
    பரந்த விரிந்த உலகத்தில் ஒரு குறுகிய வட்டத்தில் சிக்காது பரந்த விரிந்த மனத்துடன் வலம் வருதல் வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் நிகழுபவை கொண்டும் எப்படி கவிதையாய் நித்தம் நித்தம் புணர்கிறீர்கள் என்ற வியப்பில் உள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  13. மனதின் இரக்கம் மனிதத்துள்தான்.அருமையான சுட்டுதல் சீனி !

    ReplyDelete