Tuesday 13 November 2012

குளித்த குழந்தையும்- உதித்த எண்ணங்களும்!

பூக்கள்-
அழுவதில்லை-
மழையில்-
நனைவதற்கு!

மழலை-
நீ!-
ஏன்!?-
அழுகிறாய்-
குளிப்பதற்கு!?

கிணத்து-
தண்ணியும்-
கொஞ்சம்-
உப்பு குறைக்கும்!

கூடுதலாக-
தண்ணீரும்-
சுரக்கும்!

நீருக்குள்ளே-
கூடுதலாக-
ஈரம்-
சுரக்கும்!

ஒரு பக்கம்-
உன்னை-
பெத்தவ!

மறுபக்கம்-
உன்-
அப்பனை-
பெத்தவ!

தென்றலும்-
நின்று பார்க்குது-
உன் அழுகை-
சத்தம்-
கேட்கவே!

குடும்பமே-
போராடுது!

உன்-
அழுகையை-
நிறுத்த மன்றாடுது!

வாசனை பூச்சுகள்(பவுடர்)-
வாசம்-
பெறவில்லை!

ஒரு பாவம்-
அறியா-
குழந்தைகள் என்பதால்-
மணக்க-
மறுப்பதில்லை!

உன் -
மொக்கை வாய்-
சிரிப்புக்கு!

அத்தனை-
மலர்களும்-
தோற்கும்!

சிறியவர்கள் மேல்-
அன்பு காட்டாதவரும்-
பெரியவர்களிடம்-
மரியாதை-
காட்டதவரும்-
நம்மை சார்ந்தவர்-
அல்ல!-
நபி மொழி!

நம் பிள்ளைகளிடம்-
நாம் எப்படி நடக்கிறோம்-
சிந்தித்தால்-
அடையலாம்-
நல்வழி!



12 comments:

  1. கிணத்து-
    தண்ணியும்-
    கொஞ்சம்-
    உப்பு குறைக்கும்!

    கூடுதலாக-
    தண்ணீரும்-
    சுரக்கும்!

    நீருக்குள்ளே-
    கூடுதலாக-
    ஈரம்-
    சுரக்கும்!//

    மனம் கொள்ளை கொண்ட வரிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காதல், குழந்தைப் பாசம், குதூகலம், உறவு, சீரழிவைக் கண்டு சீற்றம். அநியாயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
    குழப்பத்துக்கு எதிரான கொந்தளிப்பு இவை எல்லாமே உங்கள் பல்வேறு கவிதை வரிகளில் நிரம்பி வழிகிறது.
    எல்லா ரசனையும் உண்டு உங்கள் வரிகளில். இதுதானே ஒரு நல்ல கவிஞனுக்கு வேண்டும்?

    ReplyDelete
  3. எத்தனை எத்தனை சிந்தனை வரிகள்... அருமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. நம் பிள்ளைகளிடம்-
    நாம் எப்படி நடக்கிறோம்-
    சிந்தித்தால்-
    அடையலாம்-
    நல்வழி!

    சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. சிந்திக்க வைத்த வரிகளும் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற மழலைப்பருவ சேட்டைகளும் ....

    ReplyDelete
  6. arumai...enathu paraattukkal....................,

    ReplyDelete
  7. அன்றாட வாழ்வியலை அழகாக்கிய கவிதை! அருமை!

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை...வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. அருமையான படைப்பு

    ReplyDelete
  10. உன் -
    மொக்கை வாய்-
    சிரிப்புக்கு!

    அத்தனை-
    மலர்களும்-
    தோற்கும்!// இரசித்த வரிகள்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில் "நலம் தருவாய் நரசிம்மா! மற்றும் வாழ வை கவிதைகள்! வருகை தாருங்கள்!

    ReplyDelete
  11. உங்கள் சிந்தனைகள் எல்லாமே வித்தியாசம் சீனி.பாராட்டுக்கள் எப்போதும் !

    ReplyDelete
  12. உன் -
    மொக்கை வாய்-
    சிரிப்புக்கு!

    அத்தனை-
    மலர்களும்-
    தோற்கும்! அடடா.... என்னவொரு கற்பனை... ரசித்தேன்.

    ReplyDelete