Wednesday 21 November 2012

மனசே மனசே...

சொன்னாலும்-
கேட்காது!

தடுத்தாலும்-
கேட்காது!

அடம்பிடித்தாலும்-
அடங்காது!

முந்தி-
செல்லும்!

சந்தி சிரிக்க-
திரும்பும்!

பாசம் வைக்கும்-
பின்-
பரிதவிக்கும்!

நேசம் கொள்ளும்-
பின்னால்-
"அதுவே-"
கொல்லும்!

எதிர்ப்பை-
சொல்லும்-
பிறகு-
எறியப்படும்!

சலிப்படைந்து-
கிடக்கும்!

"அடைந்தே-"
கிடைக்க-
மறுக்கும்!

அன்பை காட்டும்-
அடிபட்டு-
திரும்பும்!

ஆசைகொள்ளும்-
அசிங்கப்படும்!

எத்தனை முறை-
இப்படி -
நடந்தாலும்!

அது-
என்னிடமே-
திரும்பி வரும்!

அதுதான்-
என்-
மனசாகபட்டது!

சொல்லடிகளால்-
சல்லடையாக்கபட்டது!

அம்மனசை-
ஏற்று கொள்வதே-
என் வழக்கமாக-
போனது!

மனசே இல்லாமல்-
பச்சிளம் பிள்ளைகளை-
கொன்று விட்டு!

குருட்டு நியாயம்-
பேசிக்கொண்டு!

உலகில்-
தெரிகிறது-
மனித மிருகங்கள்-
வாழ்ந்து கொண்டு!

அதனால்தான்-
மனசே இல்லாமல்-
வாழ்வதை விட!

பிஞ்சுபோன-
மனசோட-
வாழ்வது-
நல்லது-
அதைவிட!

ஒன்றுதான்-
ரப்பர்-
மரமும்!
என்-
மனமும்!

தாங்கி உள்ளது-
அத்தனை-
தழும்புகளும்!

ரப்பர்-
மரத்தை-
வெட்டினால்-
பால்-
வரும்!

மனம்-
காயம்ப்படும்போதேல்லாம்-
எழுத-
வருது!





6 comments:

  1. மனதை மட்டும் தளர விடாதீர்கள்...

    ReplyDelete
  2. எல்லா நிகழ்வையும் எழுதப் பழகலாமே.

    ReplyDelete
  3. ஐயோ ......மனசில ரொம்ப பாதிப்போ
    அழகான கவிதை ஆரம்ப பந்திகள் பிரபல பாடலொன்றையும் ஞாபகப்படுத்தியது

    ReplyDelete
  4. மனதில் அதிக்ககாயம் இருக்கிறதோ எதற்கும் கவலைப்படாதீர்கள்...

    ReplyDelete
  5. மனம் காயப்பட்டால் எழுத்து வருது! உண்மை! உண்மை! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  6. மனதின் ஆட்சிக்குள்தானே நாம் ஆடுகின்றோம் !

    ReplyDelete