Sunday, 25 May 2014

தேகமெனும் மூங்கில்..!!

தொட்டுச்செல்லும்
தென்றல்!

முகத்தில் விழும்
மழைத்தூறல்கள்!

கொளுத்தும்
வெயில்!

நடு முதுகில் ஓடும்
வியர்வை துளிகள்!

அந்தி சாயும்
நேரம்!

நாசி துளைக்கும்
மல்லிகை வாசம்!

காற்றிலாடி
உரசிய கூந்தல்!

கன்னங்களை
இளஞ்சூடேற்றிய
உள்ளங்கைகள்!

உச்சந்தலையில் விழும்
நீர்வீழ்ச்சி!

உள்ளங்காலை சுடும்
தீக்கங்கு!

இப்படியாக
நிகழ்வுகள்!

தேகத்தை
தாக்குகிறது!

உணர்வுகளை தட்டுகிறது!

எழுதிட சொல்லி தள்ளுகிறது!

கவிதைகள் பிறக்கின்றது!

புல்லாங்குழலியினுள்
செலுத்தப்படும் காற்று
விரலசைவிற்கு தக்கவாறு வெளிப்படும்
ஓசையைப்போல்!

     

2 comments:

  1. விரலசைவிற்கு ஏற்றவாறு வெளிப்படும் இசையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. பார்க்கும் அனைத்திலும் உங்களுக்கு கவிதை தெரிகிறது....

    வாழ்த்துகள்.

    ReplyDelete