சன்னலுக்குள்
மேகமாய் மிதந்திருக்கிறாய்!
சந்துகளுக்கிடையில்
மின்னலாய் மறைந்திருக்கிறாய்!
அவசரத்தில் கதவிடுக்கில்
கடிபட்டும் இருக்கிறாய்!
அழுக்கு கூடையில்
அண்ணாந்து பார்த்தும் இருக்கிறாய்!
கொடியில் காய்ந்தபோது
வானவில்லாய் காட்சியும் தந்திருக்கிறாய்!
உன்னை கட்டியவளை விட
கட்டிக்கொண்ட உன்னையே
அதிகம் கண்டவன் நான்!
எழுத்துருவம் கொடுக்க
துணிந்தவன் நான்!
உன் சொந்தக்காரியை
எழுதுவதாக எண்ணமில்லை!
காரணம் இல்லாமலில்லை!
ஏனென்றால்
இவ்வுலம்
எழுதப்பட்ட உன்னை விட்டு விடும்!
எழுதிய
என்னையும் விட்டு விடும்!
எனக்கென்ன என
வெள்ளந்தியாய் இருந்தவளை
வார்த்தைகளால் காயப்படுத்திடும்!
மேகமாய் மிதந்திருக்கிறாய்!
சந்துகளுக்கிடையில்
மின்னலாய் மறைந்திருக்கிறாய்!
அவசரத்தில் கதவிடுக்கில்
கடிபட்டும் இருக்கிறாய்!
அழுக்கு கூடையில்
அண்ணாந்து பார்த்தும் இருக்கிறாய்!
கொடியில் காய்ந்தபோது
வானவில்லாய் காட்சியும் தந்திருக்கிறாய்!
உன்னை கட்டியவளை விட
கட்டிக்கொண்ட உன்னையே
அதிகம் கண்டவன் நான்!
எழுத்துருவம் கொடுக்க
துணிந்தவன் நான்!
உன் சொந்தக்காரியை
எழுதுவதாக எண்ணமில்லை!
காரணம் இல்லாமலில்லை!
ஏனென்றால்
இவ்வுலம்
எழுதப்பட்ட உன்னை விட்டு விடும்!
எழுதிய
என்னையும் விட்டு விடும்!
எனக்கென்ன என
வெள்ளந்தியாய் இருந்தவளை
வார்த்தைகளால் காயப்படுத்திடும்!
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇவ்வாறெல்லாம்கூட கற்பனைகள் உருவெடுக்குமா? ரசிக்கும்படி உள்ளது.
ReplyDeleteஎனக்கென்ன என
ReplyDeleteவெள்ளந்தியாய் இருந்தவளை
வார்த்தைகளால் காயப்படுத்திடும்!// அருமையான முடிவு சகோ.