அன்பார்ந்த உறவுகளே!
தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது.மாணவ சொந்தங்களின் சாதனைகளை உணர்த்தியது.எத்தனை கனகவுகளுடன் எழுதி இருப்பார்கள்.!?சாதிப்பேன் என மார்த்தட்டினார்கள்,நம் மாணவ சொந்தங்கள்.ஆனால் அச்சாதனைகள் கை கூடுமா..!?அதற்கான வாய்ப்புகளுக்கு ,இன்றைய கல்விக்கான சூழல் உள்ளதா..!?கடந்த காலங்களில் எழுதிய மாணவர்கள் என்ன ஆனார்கள்!?. படிப்பை தொடர்ந்தார்களா..!? இடையிலேயே நின்றார்களா..!? எத்தனை பேர் அறிவோம்.!?
கல்வி இன்றைக்கு காசுக்கு விற்பனையான பண்டம் ஆகிவிட்டதே! கல்லூரிகளை ஏழைகள் தொடக்கூடிய காரியமா.!?படிப்பை தொடர வேண்டுமானால்
எத்தனை இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. தாயின் தாலிக்கயிறு வரை அறுக்கப்படுகிறதே!இப்படி கஷ்ட நஷ்டத்தில் படித்த மாணவனால் ,எப்படி சமுதாயத்திற்கு தொண்டாற்ற முடியும்.!?தன்னை கஷ்டப்படுத்திய சமூகத்திற்கு தன்னை எப்படி அர்ப்பணிப்பான்!?.
ஆதலால் உறவுகளே!
மாணவ/மாணவியர்கள் வாழ்வில் கல்வியெனும் ஒளியேற்ற நம்மால் முடிந்தவற்றை செய்வோம்.எத்தனையோ செல்வந்தர்கள்,வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் உதவிகளை செய்கிறார்கள்.மனித சமூகத்திற்கான நன்மையை செய்கிறார்கள்.அந்த வள்ளல்களால் மட்டும் முடியாத காரியம்,அனைவருக்கும் கொடுத்து உதவிட.செல்வந்தர்கள் அள்ளி கொடுக்கும்போது,மற்றவர்கள் கிள்ளியாவது கொடுக்கலாமே.!.? .நாம் உதவுவது ஒரு தலைமுறைக்கான கல்வி அது.உதவுவோம்.
மாணவர்கள் உயர கை கொடுப்போம்.

உதவுவதை கடமையாக நினைப்போம்...
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஎன்கெல்லாம் கல்விச்சுடர் ஏற்றப்படுகிறதோ அங்கேல்லாம் அந்த சமூகத்தின் கண்களுக்கு வெளிச்சம் ஊட்டப்படுகின்றன. ஆதலால் கல்விக்கு உதவுவோம். மனிதநேயமிக்க பதிவுக்கு நன்றி.
நன்றாய் சொன்னீர்கள்! நடைமுறைப்படுத்துவோம்! நன்றி!
ReplyDeleteநல்ல சிந்தனை. பாராட்டுகள் சீனி.
ReplyDeleteநம்மால் முடிந்தவரை மற்றவர்கள் படிக்க உதவுவது நமது கடமையும் கூட.