Monday 27 August 2012

எல்லா புகழும் இறைவனுக்கே -5

ஆள்வாரமற்ற-
நெடுஞ்சாலையில்-
உதவிக்கு வாகனம்-
தேடுபவனை போல!

சந்தேக வழக்கில்-
உள்ளே சென்றவர்கள்-
சாகுவதற்குள்ளாவது-
திறக்கபடாதா!?-என
ஏங்கும் ஏழைகளை-
போல!

திரும்பிகூட -
பார்க்க மாட்டாளா!?-என
வருந்தும் காதலனை-
போல!

மண்ணில் விதைத்து விட்டு-
வானை கண்ணீரோடு காணும்-
விவசாயி போல!

"தேதி தள்ளி" போகாதா!?-என
கலங்கி -வசை சொற்களை
தாங்கி கிடக்கும்-
இன்னும் தாய்மை அடையாத-
சகோதரிகள் போல!

எண்ணங்களை இறக்கி-
வைத்திட முடியாமல்-
திணறி கிடக்கும்-
என்னை போல!

படித்ததில் பிடித்தது-
சந்தோசதின்போது-
கைக்குலுக்கும்-
ஐந்து விரல்களை-
விட!

கண்ணீரின் போது-
ஒரு விரல் சிறந்தது-
அதை விட!

சொன்னவர்கள் உண்டு-
"இவன்"-
எழுதலாம்!

"எவன் "-
படிப்பதாம்!?

படித்து விட்டு-
வந்ததே தெரியாமல்-
போனவர்களும் உண்டு!

பின்னூட்டம் கொடுத்து-
தெம்பூட்டியவர்களும்-
உண்டு!

விருது தந்து-
உறமூட்டுபவர்களும் -
உண்டு!


அவர்களித்த விருதினை-
ஏற்றுகொள்கிறேன்!
 

வலையுறவில் இருவருக்கு-
பகிர்ந்து கொள்கிறேன்!


30 comments:

  1. நல்ல கவிதைதான். இன்னும் சில மாற்றங்கள் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. l.k!

      ungal muthal varavukku mikka nantri!

      eppadi patta maatram sonnaal-
      mudinthaal maatri kolven....

      Delete
  2. நல்லதொரு சிந்தனை வரிகள்...

    விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
  3. விருது பெற்றதற்கும் , பகிர்ந்து அளித்ததற்கும்
    அதை செப்பிய மொழிக்கும் என் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  4. விருது பெற்றதற்கும், பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதவும்....

    ReplyDelete
  5. ஐயா வை.கோபால கிருஷ்ணன்-
    அவர்களளித்த விருதுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அதையே ஒரு கவிதை மழையாகப் பொழிந்துள்ள தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    தங்களிடமிருந்து இந்த விருதினை பகிர்ந்து கொள்ளும் இருவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  7. நன்றி. எனக்கும் விருது கொடுத்து பாராட்டிய உங்களுக்கு,,,,

    ReplyDelete
  8. வாவ்... நன்றி நண்பரே. என்னுடைய முதல் விருது. வார்த்தைகள் வரவில்லை. பகிரந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. // படித்ததில் பிடித்தது-
    சந்தோசதின்போது-
    கைக்குலுக்கும்-
    ஐந்து விரல்களை-
    விட!

    கண்ணீரின் போது-
    ஒரு விரல் சிறந்தது-
    அதை விட! //

    அருமையான வரிகள் . பகிர்ந்தமைக்கு நன்றி.
    என்னை போன்ற அறிமுகங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்களின் விருது பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. தொடருங்கள்.

    ReplyDelete
  10. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    ReplyDelete
  11. விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா!

    வழக்கம் போல் கவிதை செம!

    ReplyDelete
  12. கவிதை அருமை சகோ!
    சந்தேக வழக்கில்-
    உள்ளே சென்றவர்கள்-
    சாகுவதற்குள்ளாவது-
    திறக்கபடாதா!?-என
    ஏங்கும் ஏழைகளை-
    போல!/*/ம்ம் வலிகள் அழமானது!ம்ம்

    ReplyDelete
  13. விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  14. விருதுக்கு சந்தோஷம் சீனி.இன்னும் கிடைக்கவும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா.....
    இன்னும் பல விருதுகள் பெற

    ReplyDelete
  16. உற்சாகம்.. இன்னும் தொடர்ந்து பல விருதுகள் பின்வரிசையில் காத்திருக்கின்றன,...

    வாழ்த்துகள்!!!

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete
  17. விருது வாங்கிய தங்களுக்கும், தங்களிடம் விருதினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete