Sunday 2 December 2012

வெளிச்சங்கள்!" (6)

வள்ளுவரை-
"அய்யன்"-
என்கிறோம்!

காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!

நேருவை-
மாமா-
என்கிறோம்!

பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!

அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!

இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?

மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!

உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!

முத்துராமலிங்க தேவர்!

ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!

தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!

முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!

இன்றோ-
அப்பாச-
 அழைப்புகள்-
அணைந்து-
 போனது!

இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?

சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?

எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?

    

14 comments:

  1. யாரைச் சொல்வது ?

    அரசியலைச் சொல்வது முட்டாள்தனம்
    முட்டாள் அரசியல்வாதிகளைச் சொல்வது கெட்டித்தனம்

    மக்களைச் சொல்வது முட்டாள்தனம்
    முட்டாள் அரசியல்வாதிகளின் முட்டாள் பேச்சுக்களை நம்பும் முட்டாள் மக்களைச் சொல்வது கெட்டித்தனம்

    வரலாறு ரொம்ப முக்கியம்

    ReplyDelete
  2. செமையான கேள்விகள் - மக்களிடம் விழிப்புணர்ச்சி............ இல்லப்பா

    ReplyDelete
  3. மாமா, மச்சான் என்றழைப்பதில்லை....

    இதில்கூட அரசியல் இருக்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. arunaa!

      aam !

      angu veriyootta patta piraku!
      uravukal maranthu pokirathu!

      Delete
    2. aruna!

      antru matra mathathavarkalaiyum-
      avvaaru azhaippaarkal!

      intru maariyullathu-
      athaithaan-
      ezhuthi ullen!

      varavukku mikka nantri!

      Delete
  4. இருவரையும்தான்!

    ReplyDelete
  5. நல்ல கேள்விகள்! அருமையான படைப்பு! மனிதம் வளர்ப்போம்! நன்றி!

    ReplyDelete
  6. நல்ல கேள்விகள்.....

    பதில் சொல்லத்தான் யாரும் இல்லை....

    ReplyDelete