Saturday 5 October 2013

நம்புங்க பாஸ்!

எப்போதும்-
"படம்-"
பார்ப்பார்கள்!

அன்றைக்கு-
சட்டமன்றத்தில்-
பார்த்து விட்டார்கள்!

ஊழல் -என
ஊளையிடுவார்கள் !

பிணபெட்டியிலேயே-
ஊழல் பண்ணினார்கள்!

தீவிரவாதம்-என
தீவிர பிரச்சாரம்!

தன் ஆட்சியிலேயே-
நாடாளுமன்ற தாக்குதல்-
அரங்கேற்றம்!

வெடிகுண்டு கலாசாரம்-என
கத்துவார்கள்!

அவர்கள்-
அலுவலகத்தில்-
அவர்களே -
வைப்பார்கள்!

கதற கதற-
கலவரத்தின்போது-
கற்பழிப்பார்கள்!

ஆனால்-
பெண்கள் பாதுகாப்பு-
பேசுவார்கள்!

இரவு நேர விடுதியில்-
பெண்களை -
அடிப்பார்கள்!

ஆனால்-
இவர்கள்-
பெண்ணின் நிர்வாண நடனம்-
பார்ப்பார்கள்!

நம்புங்க பாஸ்!
இவர்கள்தான்!

கலாசார காவலர்கள்!
தேச பக்தர்கள்!

நாட்டு பற்றாளர்கள்!
நிறைய பெயர்களை-
இவர்களே-
சூட்டி கொள்வார்கள்!

பி.ஜே .பி யை-
வைத்து-
காங்கிரஸ் பயங்காட்டுது!

காங்கிரஸ் மேலுள்ள-
கோபத்தை -
பி.ஜே.பி -
பயன்படுத்த பார்க்குது!

இவ்விரு கட்சிகளால்-
என்ன நாட்டின் வளர்ச்சி!?

தெரிகிறது-
அவர்களின்-
கட்சியினரின்-
வளர்ச்சி!

தேவை-
நாட்டை ஆள-
மாற்று அரசியல்!

அதற்கு-
பயன்படுமா-
வரும்-
நாடாளு மன்ற தேர்தல்...!!,


5 comments:

  1. நல்ல ஆதங்கம் சீனி
    ஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே

    என்ன பண்ணலாம்...?

    கவிதை அருமை

    ReplyDelete
  2. மாற்று அரசியலைத்தான் பல வருடங்களாக தேடிக்கொண்டு இருக்கிறோம்! கிடைத்த பாடில்லை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete