Wednesday 12 March 2014

பிறந்த பூமி !(20)

எவ்வளவு நேரம்தான் அழுவது!
கண்களுக்கும் நீர் வறட்சி ஏற்பட்டது!

கிணறு கண்டுபிடித்துவிட்தாக  வீரரொருவர் சொன்னார்!
இருபிரிவையும் அங்கு கூடாரமிட கிராசியானி உத்திரவிட்டார்!

கிராசியானி-
மக்ரோனியை காண சென்றார்!
மக்ரோனி படுக்கையில் கிடந்தார்!

தொட்டுப்பார்த்தார்!
காய்ச்சலில் கோபத்தை உணர்ந்தார்!

படைகளும் ,தளபதிகளும் ஓய்வு எடுத்தார்கள்!
சிலர் காவல் புரிந்தார்கள்!

கண் விழித்தார் மக்ரோனி!
அருகில் பார்த்துக்கொண்டிருந்தார் கிராசியானி!

'இப்படியொரு சோதனையை நான் சந்தித்ததே இல்லை..!-
இது மக்ரோனி!

''என்ன அந்த ஒட்டக கூட்டமா..!?-
இது கிராசியானி!

''நீங்களும் சந்திச்சீங்களா..!?
அந்த கூட்டத்தை..!?-
மக்ரோனி கேட்டார்!


கிராசியானி தொடர்ந்தார்!

''ஆமாம்!
கொஞ்சம் சுதாரித்ததால் குறைக்க முடிந்தது சேதாரத்தை!

அப்படையின் பெயர் ''ஃபீஸபீல்''!
சாகும் வரை போரிடனும் என்பதில் உறுதிக்கொண்டவர்கள்!

'அல் கரீமி''அப்படைக்கு தலைவர்!
இதற்கு முன்னால் நம் அரசின் விசுவாசியாக உளவுத்துறை தலைவர்!

நம் அதிகாரிகளால் வேலை நீக்கப்பட்டார்!
உமர் முக்தாரால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்!

நாட்டை விட்டு எகிப்துக்கு சென்றார்!
வேறுவழியாக லிபியாவிற்குள் நுழைந்து பழிவாங்குகிறார்!

புலிகளின் குகைக்குள் நுழைந்து விட்டோம்!
பழிதீர்த்தால்தான் நாம் பிழைப்போம்!''

கிராசியானி சொல்லி முடித்தார்!

வீரர்களை தயாராக இருக்க உத்திரவிட்டார்!

மக்ரோனி தூங்கியெழுந்த பிறகு உற்சாகமாக இருந்தார்!

போர்களம் காண துடித்தார்!

படை குழுமிய இடத்திற்கு இரு தளபதிகளும் சென்றார்கள்!

வீரர்கள் சோர்ந்து இருந்தார்கள்!

நாடு திரும்புவோமா..!.?
''காடு ''சேர்வோமா..!? என்கிற எண்ணத்தில்!

கிராசியானி தொடர்ந்தார்!

''வீரர்களே!
இத்தாலியின் பெருமைக்குரியவர்களே!

நம் தேச பெருமைக்கு சிறுமை சேர்க்கிறார்கள்!
இந்த காட்டரபிகள்!

ஆயுதங்கொண்ட நம்மை!
ஆட்டங்காண செய்திடுமோ வஞ்சக தன்மை!

கிளர்ந்தெழுவோம்!
கலகக்காரர்களை கிழித்தெறிவோம்!

உசுப்பேற்றினார்!
அதில் வெற்றியும் கண்டார்!

படை புறப்பட்டது!
போகும் பாதையில் வேவு விமானம் சிதறிகிடந்தது!

கிராசியானி பாகங்களை தொட்டுப்பார்த்தார்!
விழுந்து மணிக்கணக்கில் ஆகிவிட்டதை குளிர்ந்து உணர்த்தியது!

காலடி தடங்கள் இருக்கிறது!
குதிரை தடங்கள் இருக்கிறது!

எதிரிகள் அருகில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது!

''முட்டாள்கள் வசமாக மாட்டிவிட்டார்கள்''-என
மக்ரோனி குரல் ஒலித்தது!

கிராசியானிடமிருந்து பதிலில்லாமல் இருந்தது!

குதிரை தடங்களை பின்தொடர்ந்தார்கள்!
கொஞ்ச தூரம் சென்றார்கள்!

திடுக்கிட்டு நின்றார்கள்!
தடங்கள் தடைபட்டதால் திகைத்தார்கள்!

முட்டாள்கள்  யார்..!?

போர் வீரர்களா..!?
போராளிகளா..!?

(தொடரும்.....)

6 comments:

  1. சுவாரஸ்யம் தொடர்கிறது...

    ReplyDelete
  2. வாலி ஸ்டைலில் இருக்கிறது.. தொடருங்கள்..!

    ReplyDelete
  3. ஒரே அதிர்ச்சியா இருக்கே இத்தாலியர்களுக்கு ..

    ReplyDelete
  4. சஸ்பெண்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது! நன்றி!

    ReplyDelete
  5. சஸ்பெண்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது! நன்றி!

    ReplyDelete
  6. அட மீண்டும் மாட்டிக்கொண்டார்களா இத்தாலியர்கள்......

    ReplyDelete