Monday 31 December 2012

முகலாயர்களே....(23)

ஆட்சியாளராக-
இருந்த -
மன்னர்!

சிறைவாசியாக-
ஆனார்!

நாடு-
கடத்தப்பட்டார்!

ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!

தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!

சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!

ஆண்டுகள்-
கழிந்தது!

உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!

பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!

பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?

என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?

பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?

பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?

மாட மாளிகைகள்-
எங்கே!?

மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?

என்றெல்லாம்-
அழவில்லையே!!

என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!

சிறையிலேயே-
இருந்தார்!

அதிலேயே-
இறந்தார்!

அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!

உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!

காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!

தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!

இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!

அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!

பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"

"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!

ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!

"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!

மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?

ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?

(தொடரும்....)

குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)






10 comments:

  1. அறியாத பல முடிச்சுக்களை அவிழ்க்கிறீர்கள்..
    தொடருங்கள் அறிய ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  2. வரலாற்றுக் கவிதைகள் மிகவும் பயனுள்ளது. தொடர்க.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. aathira...

      mikka nantri sako....

      ungalukkum vaazhthukkal...

      Delete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமையான வரலாற்று கவிதை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako..!

      mikka nantri!

      ungalukkum vaazhthukkal...

      Delete

  5. வணக்கம்!

    மின்னும் வலையுலகில் விஞ்சும் தமிழ்விளைத்தீா்
    மன்னும் புகழின் மலை!

    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete
    Replies
    1. ayya...!

      mikka nantri!

      ungalukkum mikka nantri!

      Delete