Monday 10 March 2014

பிறந்த பூமி !(18)

''படைகள் நடையைக்கட்டியது!
சூரியன் தன் தீ நாக்கை நீட்டியது!

வெயிலென்றால் கொளுத்தும் என்பது தெரியும்!
கொல்லும் என்பது இப்போதே தெரிந்தது!

கொடுமைகளுக்கிடையே படை நடந்தது!
இல்லை!
தவழ்ந்தது!

தலைக்கவசம் அடுப்பிலிட்ட சட்டியாய் சுட்டது!

துப்பாக்கிகள் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையானது!

தாகத்தால் தண்ணீர் தீர்ந்தது!
தண்ணீரில்லாமல் வீரர்களுக்குள் சங்கடமானது!

வெளுத்த உடல்கள் கருகியது!
மயங்கி விழுந்தவர்களை மணல் வறுத்தது!

நடக்க முடியாதவர்களை சுமந்தார்கள் நடக்க முடிந்தவர்கள்!

நடக்க முடிந்தவர்களும் ''சுமை''கூடியதால் துவண்டார்கள்!

நடக்கும்போதே மயங்கியும் விழுந்தார்கள்-
செத்தும் விழுந்தார்கள்!

குழிகூட தோண்டாமல் பள்ளத்தில் தள்ளி மூடினார்கள்!

இருபுற படையிலும் ஒரே கதிதான்!
உயிர்பலிகள் சிறுவேறுபாடுதான்!

கிராசியானி படையில் முப்பதைந்து பேர்கள்!
மக்ரோனி படையில் அறுபது பேர்கள்!
செத்தவர்கள் பட்டியல்!

கணக்கு குழம்பியது!
தூரம் எவ்வளவு என அறிய முடியாது போனது!

கிராசியானி நொந்தே போனார்!
வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிறப்பாக நடித்தார்!

தொடர்ந்து அழைத்துச்சென்றார்!
இல்லை-
இழுத்துச்சென்றார்!

ஓய்வு நேரம் வந்தது!
கொடிய வெயிலில் ஓய்வு என்பது வியப்பளித்தது!

துப்பாக்கியை நிறுத்தினார்கள்!
அந்நிழலே வீடாக நினைத்தார்கள்!

தன் குடும்ப புகைபடத்தை கண் குளிர பார்த்தார்கள்!
கன்னங்களை கண்ணீரால் நனைத்துக்கொண்டார்கள்!

மற்றொருபுறம்-
மக்ரோனி படை ஓய்வு எடுத்த இடம்!
மக்ரோனிக்கு பார்வைக்கு எதிரே ஒரு ஒட்டக கூட்டம்!

மனதோடு சந்தோஷம்!
தண்ணீர் கிடைத்தது என குதித்தது மனம்!

துப்பாக்கியை கொண்டு வேறொரு திசை நோக்கி சுட்டார்கள்!

ஒட்டக பயணிகள் திரும்பி பார்த்தார்கள்!

கொடியசைத்து வரும்படி சைகை காட்டினார்கள்!

பயணிகள் ஆலோசித்து படை நோக்கி வந்தார்கள்!

வருகிறார்கள்!
வருகிறார்கள்!

நல்ல உணவு கிடைத்ததாக வீரர்கள் மகிழ்ந்தார்கள்!

நெருங்கி வந்துவிட்டார்கள்!

திடீரென்று ஒட்டகங்கள் அணையாக நின்றது!

''டுமீல்''
''டுமீல்''

''விஸ்க்''
''விஸ்க்''

தோட்டாக்கள் பறந்தது!

(தொடரும்...!!)

4 comments:

  1. எத்தனை உயிர் இழப்புகள்...!

    ReplyDelete
  2. இறக்கும் போது ஒரு பிடி மண்ணும் கிடைக்காது என்பதை உணர்ந்திருப்பார்கள்! கலங்க வைக்கிறது!

    ReplyDelete
  3. போர் - மனிதர்களின் ஆசையினால் எத்தனை உயிரிழப்பு..

    தொடர்கிறேன்.

    ReplyDelete