Saturday 15 March 2014

பிறந்த பூமி !(23)

கிராசியானி கேட்டார்-
எப்படி நம்புவது...!?

முக்தார் சொன்னார்-
''உமர் முக்தார் பொய் சொல்வதில்லை!
''நீங்கள் என் முகம் பார்க்க பாலைவனத்தில் கேட்டதை மறப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை!
இதை விட வேறென்ன.!.?சொல்வது!?

நம்பிவிட்டார்!

விலங்குகளை அவிழ்த்து விட்டார்!

நாற்காலியில் அமரும்படி கேட்டுக்கொண்டார்!

முக்தாரும் நன்றி தெரிவித்தார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''உமர் முக்தார் அவர்களே!
உங்களை இந்நிலையில் பார்ப்பேனென நினைக்கவில்லை!

நான் சொல்லுவதை கேட்டால்!
அனைவரையும் விடுதலை செய்யமுடியும் என்னால்!

உமர்-
''ஒத்துழைக்கிறேன்-
காட்டிக்கொடுக்ககூடியதாக இல்லாததென்றால்..!?

கிராசியானி தொடர்ந்தார்-

''உங்கள் கலகத்தால் இழந்ததை கணக்கிட முடியாது!

சிலரை கைது செய்ததால் வெற்றியென்று கொண்டாட முடியாது!

கலகக்காரர்களை சரணடைய சொல்லவும்!

ஆயுதங்கள் ஒப்படைக்கச் சொல்லவும்''

உமர் முக்தார் புன்முறுவல் பூத்தார்-
பேச்சை தொடர்ந்தார்!

''அழகாக பேசுனீர்கள்!

என் தேச நிலமையில் உங்கள் தேசமும்!
என் இடத்தில் நீங்களும்! இருந்தால்-
நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்!?

நடுவில் துப்பாக்கி வைத்துக்கொண்டு -
நீயே சுட்டுக்கொண்டு சாகிறாயா..!?

நான் சுட்டு நீ சாகிறாயா..!?-என்பதுபோலுள்ளது-
உங்கள் ஆசைகள்!''

கிராசியானி தொடர்ந்தார்-
''அவசரம் வேண்டாம்!
ஒரு வாரம் அவகாசம்!''

உமர்முக்தார் சொன்னார்-
''இது கால விரயம்!

கைதிகள்அனைவரும் விலங்கிடப்பட்டார்கள்!

சிறைக்கு இழுத்துச்செல்லப்பட்டார்கள்!

விலங்குகளின் கனத்தினால் உமர் தள்ளாடி தள்ளாடி சென்றார்!

கிராசியானி பரிதாபமாக பார்த்தார்!

இதுவரை-
போராளிகளுக்கும்!
வீரர்களுக்கும்தான் யுத்தம்!

உமர் முக்தார் கைதுக்குபின் -
தலைகீழானது-
நிலவரம்!

''பெங்காசி நகரில் கவனர் தோபிக்கோ மிஸில்லியும்-
அவர் மனைவியும் படுகொலை!

சுட்டவனும் -
மெய்க்காவலர்களால் சுட்டுக்கொலை!

''அல் அஜீஸியா மாவட்ட காவல்துறை அதிகாரியும்-
அடுத்த அடுத்த பதவிகளிருந்தவர்களும் காலி!

காலி செய்தவனும் காலி!

சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!

''யார் இவர் !?''சந்தேகிப்பதற்குள் சுட்டுவிடுகிறார்கள்!

கிராசியானியிடம் கொலை செய்திகளை சொன்னார்கள்!

அவரோ ''குலை நடுங்கி ''போனார்!

சிறைக்கூடத்திற்கு சென்றார்!

உமர் முக்தாரை காண வேண்டும் என்றார்!

''அழைத்து வருவதாக'' அதிகாரி சொன்னார்!

''அழைத்துச்செல்லவும்''என கிராசியானி சொன்னார்!

போகிறார்கள்!

இருளடைந்த அறையை காண்கிறார்கள்!

''க்ரீச்''என கதவு திறக்கிறது!

கண்கள் அறையின் இருளிற்கு பழக தாமதிக்கிறது!

''உமர் முக்தார்....!!-
கிராசியானி அழைத்தார்!

''ம்...ம்..''ஒரு மூலையில் முனங்கினார்!

சிறு வெளிச்சத்தால் உமரை அடையாளம் கண்டார்!

தொட்டுப்பார்த்தார் காய்ச்சலை உணர்ந்தார்!

தூக்கி உட்கார வைத்துப்பார்த்தார் -
கிராசியானி உறைந்தே போனார்!

(தொடரும்.....!!)

4 comments:

  1. ???

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது.....

    தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள்! தொடர்கிறேன்!

    ReplyDelete