Thursday 20 March 2014

பிறந்த பூமி !(28)

நீதிவிசாரணை நடக்கவுள்ளது!
சாட்சியங்களை அரசு வரவேற்கிறது!-
இப்படியாக-
அரசாங்கம் அறிவித்தது!

வக்கீல்கள் உமருக்காக வழக்காட முன்வந்தனர்!

உமரோ மறுத்தார்!

நியமிக்கப்பட்ட நீதிபதிகள்-
ஐவர்!

அதில் அரபியர் இருவர்!
இத்தாலியர் மூவர்!

நாளும் வந்தது!
நீதிமன்றமும் கூடியது!

மக்களும் கூடினர்!

சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்!

உமருக்கு எதிராக குற்றம் சாட்டினர்!

அவர்கள் எல்லோரும்இத்தாலியர்கள்!

பிறகு கிராசியானியை அழைத்தார்கள்!

உமரைப்பற்றி கேட்கப்பட்டது!

''உமர் குற்றமற்றவர்''என கிராசியானி வாய் மொழிந்தது!

நீதிமன்றமே ஸ்தம்பித்தது!

லிபியர்கள் வாழ்த்தொலியால் அம்மன்றமே ஆட்டங்கண்டது!

நீதிபதி மரச்சுத்தியலால் அடித்தார்!

''அமைதி,அமைதி, என்றுரைத்தார்!

அமைதியடைந்ததும் மக்களை கண்டித்தார்!

''நீங்கள் சுய நினைவில் உள்ளீர்களா..!?-
கிராசியானியிடம் நீதிபதி கேட்டார்!

''ஆமாம்!தெளிவாகத்தான் உள்ளேன்!-
கிராசியானி பதிலளித்தார்!

அ.வ (அரசுதரப்பு வக்கீல்)
''அப்படியானால் உமரை ஏன் கைது செய்தீர்கள்..!?''

ஜெ.கி (ஜெனரல் கிராசியானி)
''அதிபர் முசோலினி அவர்களின் உத்தரவினால் கைது செய்யப்பட்டார்கள்!

அ.வ-''நம் நாட்டு படைக்கு ஏற்பட்ட இழப்புகள் யாரல் நடந்தது!?

ஜெ.கி-'இழப்புகள் நடந்தது உண்மைதான்,
உமர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரமில்லாமல் இருக்கிறது!

அ.வ- அப்படியானால் உமர் சுந்திரப்போராட்டக்குழு தலைவரில்லையா..!?

ஜெ.கி- உமர்தான் தலைவெரென்றால்,துணைத்தலைவர்,செயளாலர் என்பதும் இருக்கவேண்டும் இல்லையா..!.

அ.வ-''எதற்காக பாலைவனத்தில் பேச்சு வர்த்தை நடத்தினீர்கள்..!?அப்போது யாரெல்லாம் வந்தார்கள்!?

ஜெ.கி-நாட்டில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினோம்!
அதற்கு கூட போராட்டக்குழு பிரதிநிதிகளையே அழைத்தோம்!

அ.வ-''அப்போது உமரை பார்த்தீர்களா..!?

ஜெ.கி-''இல்லை!அனைவரும் முகத்தை மறைத்திருந்தார்கள்!

அ.வ- ''எதனடிப்படையில் வானொலியில் பேச வைத்தீர்கள்..!?

ஜெ.கி-''மக்கள் உமரை மதிப்பதால் இவரது பேச்சுக்கு கட்டுப்படுவார்கள் என்பதால்..!!

அரசுத்தரப்பு -
கேள்விகளால் துளைத்தெடுத்தது!

''உமர் குற்றவாளி என்பதற்கு ஆதாரமில்லை''-என்பதாக
தர்க்கரீதியாக கிராசியானியின் பதிலிருந்தது!

நீதிமன்றம் இவ்வழக்கை இருவாரங்கள் தள்ளிவைத்தது!

பத்திரிக்கைகள் -
நீதிமன்ற விசாரனையை விரிவாக எழுதியது!

நாட்கள் சென்றது!

முசோலினியிடமிருந்து கடிதம் வந்தது!

கிராசியானி கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக-
அக்கடிதம் சொல்லியது!

(தொடரும்....!!)





4 comments: