Sunday 23 March 2014

பிறந்த பூமி !(31)

மரியாதைக்குரிய நீதிபதியவர்களே!

நாட்டில் நடந்த தாக்குதல்களை சொன்னீர்கள்!

நான் அதில் சம்பத்தபட்டதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்!?

தாக்குதல் நடந்த நேரம் அவ்விடத்தில்  நானில்லை!

இதனை நிருபிக்க என்னிடம் ஆதாரங்களும் இல்லாமலில்லை!

நான் ஒரு வயோதிகன்!

எப்படி இவைகளில் சம்பத்தப்பட்டிருப்பேன்!?

நியாயமான விசாரணை தேவை!

போராளிகளை கொடூரர்களாக சித்தரிப்பது தேவையில்லாதவை!

என்னை தண்டிக்கதான் நீங்கள் விரும்பினால் தண்டித்துக்கொள்ளுங்கள்!

நான் மௌனித்து விடுகிறேன்!-
நீங்கள் நாடகம் நடத்துங்கள்!

நீதிபதி குறுக்கிட்டார்!

''நீங்கள் முஸ்லிமான பெரியவர்!
பொய் சொல்லாதவர் என அறியப்பட்டவர்!

நீங்கள் சம்பத்தபட்டீர்களா..!.?
இல்லையா..!.?

இத்தாக்குதல்களுக்கு உங்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டனவா...!?
இல்லையா..!?

உமர் முக்தார் தொடர்ந்தார்!

''இந்நாட்டிலுள்ள அனைவர்களும் எனது மாணாக்கர்கள்!

அல்லது-
எனது மாணாக்கர்களின் மாணாக்கர்கள்!

இம்மக்களின் பல பிரச்சனைகளுக்கு ஆலோசனை சொல்லியுள்ளேன்!

அது வீட்டு விவகாரமானாலும்!
நாட்டு விவகாரமானாலும்!

நானே அவ்விடத்திற்கு சென்றும் பார்வையிடுவேன்!

தவறாக நடந்தால் சீர்திருத்துவேன்!

சொல்லிக்கொண்டிருந்தார் உமர் முக்தார்!

நீதிபதி குறுக்கிட்டார்!

''நீங்கள் சுற்றி வளைத்து சம்பத்தபட்டதாக சொல்கிறீர்கள்!

நீங்கள் மரணத்தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்கபடுகறீர்!

மன்னிப்பு வேண்டினால் தண்டனை குறைப்பு பற்றி விவாதிக்கப்படுவீர்!

நீதிபதி தீர்ப்பை சொல்லி விட்டார்!

உமர் முக்தார் ஏறிட்டுப்பார்த்தார்!

(தொடரும்.....!!)

4 comments:

  1. எப்படியும் அவர்கள் முடிவு எடுத்துவிட்டார்கள்... எதற்கு இந்த விசாரணை நாடகம்.... தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. நீதிபதிக்கு என்னவொரு ஆணவம்...!

    ReplyDelete
  3. கண் துடைப்பு விசாரணையாக உள்ளதே!

    ReplyDelete