Saturday 1 March 2014

பிறந்த பூமி !(9)

மண் கடல் போல்-
காட்சி தந்தது பாலைவனம் !

நடுவில் மட்டுமே-
ஒரு கூடாரம்!

மணி பணிரெண்டு!

நேரம் சென்றது-
வினாடிகளாக கழிந்துக்கொண்டு!

காத்திருந்தார்கள்-
ஜெனரலும்!
மற்ற இருவரும்!

பார்வை விரித்திருந்தார்கள்-
வழியெங்கும்!

வருகிறது-
புழுதியை  கிளப்பியபடி!
குதிரைகளின் காலடி!

மூன்று திசைகளிலிருந்து குதிரைகள்!
அளவிட்டதுபோல் ஒன்றாக சேர்ந்தார்கள்!

வந்தனர் மூவர்!
மரியாதை செய்தனர்!

அமரச்சொல்லி கைகாட்டினார்-
ஜெனரல்!

இடம் மாறி அமரலாமே!?-
இது வந்தவரில் ஒரு குரல்!

இடம் மாறி அமர்ந்தார்கள்!

நான் ஜெனரல் கிராசியானி!
இவர்கள் என் மெய்ப்பாதுகாவலர்கள்!

நான் உமர்முக்தார்!
இவர்கள் என் நண்பர்கள்!

''ஆண்களுக்கு முகத்திரை தேவையா..!?-
புருவங்களை கவனித்துக்கொண்டே-ஜெனரல் கேட்டார்!

''கண்களையும் ,புருவங்களையும் வைத்தே-
கண்டுபிடிப்பவர்களிடம்-
முகத்திரையணிவது தவறா..!?-
இது உமர் முக்தார்!

ஜெனரல் பொய் சிரிப்பை தவழ விட்டார்!

''முகம் பார்த்து பேசினால் சிறப்பாக இருக்குமே..!?-
ஜெனரல் கேட்டார்!

''முகம் திறந்து பேசுவதை விட-
மனம் திறந்து பேசுவது சிறப்பு.!-
இது உமர் முக்தார்!

ஜெனரல்!
''பேச்சு வார்த்தைக்கு வருவோமே..?''

உமர் முக்தார்-
''எதன் அடிப்படையிலென்றால் சிறப்பாக இருக்குமே..!?

ஜெனரல்-
''பத்திரிக்கைகளில் அறிக்கை பார்த்திருப்பீர்களல்லவா..!?

உமர்-
''முழுவதுமாக நம்ப கூடியதாக இல்லையல்லலா..!?

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விட்டீர்கள்!

ஏன் ''உமர் முக்தார்''பெயருடையவர்களை விசாரித்தீர்கள்!

இதுவரை லிபியாவிற்கு வந்தது இரண்டு டிவிஷன் படைகள்!

ஒவ்வொரு முறையும் இதுவே அளவுகோல்கள்!

நீங்கள் கேட்டுள்ளது ஆறு டிவிஷன் படைகள்!

படைகள் சில நாட்களில் வந்துவிடும்!

அதுவரைக்கும் இது பேச்சுவார்த்தையெனும் நாடகம்!

உமர் முக்தார் -
அடுக்கி சென்றார்!

''எங்கள் பாதுகாப்பிற்காக படை வருகிறது..!
நீங்கள் ஆயுத கிடங்கை சூறையாடியதால் இந்நிலையானது!-
சொன்னார் ஜெனரல்!

''ஆயுதக்கிடங்கை சூறையாடினோம்!
எங்கள் தற்காப்பிற்காக எடுத்தோம்!

ஏன் காயம்பட்டவர்களை நாங்கள் சுடவில்லை!

இன்னும் எங்கள் நெஞ்சில் ஈரம் காயவில்லை!

ஆயுத போராட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை!

எங்களை யாரென்று உணர்த்துவதற்காகவே துப்பாக்கி தூக்க வேண்டிய நிலை!

தற்போதுகூட தலைநகரை கைப்பற்ற முடியும்!

தற்காப்புக்கு கூட உங்கள் படைகளிடம் ஆயுதப்பற்றாக்குறை என்பதும் தெரியும்!

திட்டுத்தோட்ட சண்டையில் உங்களுடனிருந்த சிறுபடையையும் தீர்த்திருக்க முடியும்!

தோட்டத்தில் நுழைந்த உங்களை சுட்டிருக்க முடியும்!

கிணற்று வாளியை எடுத்துச்சென்றிருக்கலாம்!

கிணற்று நீரில்  விஷத்தையும் கலந்திருக்கலாம்''

உமர் முக்தார் -
அடுக்கடுக்கான வார்த்தைகள்!

ஜெனரலுக்கோ-
மனதோடு உறுத்தல்கள்!

முடிவுதான் என்ன!?
இது முடியகூடிய விஷயமா என்ன!?

(தொடரும்...!!)

5 comments:

  1. // மனம் திறந்து பேசுவது சிறப்பு.. //

    விஷயமா...? விஷமா...?

    ReplyDelete
  2. எல்லாம் தெரிந்திருக்கிறார்களே...

    ReplyDelete
  3. இடையில் சில வேலை! தொடர்ந்து வர முடியவில்லை ! படித்துவிட்டு கருத்திடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. முக்தாரின் கேள்விகள் ஜெனரல் வாய்க்கு பூட்டு போட்டுவிட்டன! அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  5. தொடர்கிறேன்..... உமர் முக்தாரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்ன பதில் வரப்போகிறது.....

    ReplyDelete