Wednesday, 2 April 2014

பிறந்த பூமி !(41)

அலி மாறுவேடம் பூண்டார்!

தானே களத்தில் குதித்தார்!

''சந்தித்த நண்பர்கள்''சிலர் கைது!

சிலர் தலைமறைவு!

முசோலினியின் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது!

கூட்டம் குவிந்தது!

அதிலொரு தலையாக அலி தலையும் இருந்தது!

முசோலினியை பேச குரலொன்று அழைத்தது!

அதிபர் முசோலினி வந்தார்!

அதிரும்படி முழங்கினார்!

''பல ஆண்டுகாலமாக சதித்திட்டம் தீட்டினார்கள்!

நம் மக்களாட்சியை முடக்க நினைத்தார்கள்!

உளவு படை உஷார்ப்படுத்தப்பட்டது!

அதன் நடவடிக்கையால் நேற்றிரவு சிலரை கைது செய்ய முடிந்தது!

சிலர் தப்பித்து விட்டனர்!

அதில் முக்கிய தளபதி கிராசியானி ஒருவர்!

தேசத்துரோகம் செய்துவிட்டார்!

லிபியாவில் உமர் முக்தாரை கொல்லாமல்,விசாரணையெனும் நாடகமாடினார்!

நீதிபதிகளை வர வைத்து கொன்று விட்டார்!

சதித்திட்டம் தீட்டி ,இப்போது தப்பித்து விட்டார்!

''என்ன செய்யலாம் கிராசியானியை...!?-என
முசோலினி கூட்டத்தை நோக்கி கேட்டார்!

''தூக்கில் போடனும் கிராசியானியை...!!-என
மக்கள் கொந்தளித்ததில் முசோலினி மனம் குளிர்ந்தார்!

கிராசியானி கூட்டத்தை விட்டு நழுவினார்!

நாட்டை விட்டு தப்பிக்க வழி தேடினார்!

இரண்டு டிவிஷன் இராணுவம் ,லிபியா செல்லவிருந்தது!

கப்பல் தயாரானது!

ராணுவத்தினருக்கு சமையல்காரர்களை நியமிக்கும் முகவர்கள்!

அலியை யாரென்று தெரியாமல்,சமையல்காரர் என அனுமதித்து விட்டார்கள்!

அலி ,தன் நண்பர்களை வைத்து தப்பிக்க  
 ஏற்பாடு செய்தார்!

வெற்றியும் கண்டார்!

இத்தாலிய அரசு வெறி கொண்டு கிராசியானியை தேடியது!

கப்பலோ அலியை ,அமைதியாக சுமந்து சென்றது!

லிபிய துறைமுகம் வந்தது!

கப்பல் தனக்குள் வைத்திருந்தவர்களை  வெளியேற்றியது!

அலியின் மனமோ வீட்டிற்கு செல்ல வேண்டாமென எச்சரித்தது!

கால்கள் பெரிய பள்ளிவாசலை நோக்கி நடந்தது!

இமாமை சந்தித்தார்!

அலி பேசினார்!

ஹுசைன் வரவழைக்கப்பட்டார்!

அலி குடும்ப பாதுகாப்பை கூறினார்!

அல்கரீமியை சந்திக்க ஏற்பாடானது!

அலியை கண்டதும்,கரீமியின் மனம் திகைத்தது!

''நீங்களா..!?
எப்படி தப்பித்தீர்கள்!.

உங்களை சுட்டுவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்''!-என ஆச்சரியமும் சந்தோசமும் கலந்தவராக-
கரீமி கேட்டார்!

அலி,அல்கரீமி,மற்றும் சகாக்கள் ஆலோசனை செய்தார்கள்!

''உமர் அவர்களை சிறையுடைத்து மீட்க வேண்டும்''! என்றார் ஒருவர்!

''இல்லை!
வேண்டாம்!
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது''-
என்றார் மற்றொருவர்!

''கொரில்லாத்தாக்குதல் மூலம் சிதறடிக்க வேண்டும்''-என்றார் மற்றொருவர்!

அலி எழுந்தார்!

''முசோலினி துணிந்து விட்டான்!

ஆதலால்தான் மேலும் படைகளை அனுப்பி   உள்ளான்!

நாம் தாக்குதல் நடத்தினோமானால் ,ராணுவத்தினர் மக்களை கொன்று குவித்திடுவார்கள்!

அதன் சந்தர்ப்பத்தைதான் அவர்கள்  எதிர்பார்க்கிறார்கள்!''

அலி சொல்லிக்கொண்டிருந்தார்!

போராளி குழு உளவாளி வந்தார்!

படபடப்புடன் கூறினார்!

''தூக்கு மேடை சுத்தம் செய்யப்படுகிறது!

விளக்குகள் கூடுதலாக மாட்டப்படுகிறது!

முஸ்லிம் நீதிபதிகள் இருவரை கைது செய்துள்ளனர்!

மருத்துவர்கள் இருவரை அழைத்துச்சென்றுள்ளனர்!

கைதியை தூக்கிலிடும் யூத இன ''சுமிட்ஜ்'' ஐ
 கூட்டிப்போயுள்ளனர்!

(தொடரும்....!!)


4 comments:

  1. உமருக்காகவா? எப்படிக் காப்பாற்றுவார்கள்?....தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. உமர் பிழைத்தாரா? பிழைக்க வேண்டும்!

    ReplyDelete
  3. அடுத்த பகிர்வை தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. உமர் பிழைத்தாரா.... தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete