மெல்ல மாவையெடுத்து!
அதன்மேல் எண்ணெய் கொடுத்து!
நோகாமல் ஓரங்களையழுத்தி!
மேலும் கீழுமாய் விரல்களை செலுத்தி!
விசிறுகிறேன்!
''சரட், சரட்,என ஓசையை உணர்கிறேன்!
அவ்வோசைக்காக வீசிறினேன்!
விசிறும்போதெல்லாம் அவ்வோசையை கேட்டேன்!
கிழிந்தது!
விசிறிய மாவும்!
அதனை முதலாளி கண்டதால்
சீட்டும்! (வேலை)
அச்சப்தத்தில் எனக்கென்ன கேடு!.
அச்சப்தத்தில் என்னவளின் பட்டுச்சேலை சப்தமாக எண்ணி தொடர்ந்தேன் அதனோடு!
பாதகத்தி!
வாழ்க்கையின் ஓட்டத்தைதான் மாற்றினாள்!
இப்ப பிழைப்பையும் கெடுத்து விட்டாள்!
அடடா... எப்போதும் அவளின் நினைவு!
ReplyDeleteசெய்யும் வேலையில் வேறு நினைவு வந்தால் அப்படித்தான்! ஆனால் பாதகத்தி நினைவு அப்படியா?
ReplyDelete