Saturday, 19 April 2014

பிஞ்சு விரல்கள்!


எரிந்துக்கொண்டிருக்கும்
சிமிழி விளக்கு!

அதை தொட்டிட ஆசை
பிஞ்சு விரல்களுக்கு!

தொட முனைகிறது!

அனுபவ கைகள் தடுக்கிறது!

பிஞ்சு விரல்கள்
அனுபவ கையை வெறுக்கிறது!

காலம் கடக்கிறது!

பிஞ்சு விரல்கள்
பருத்த கைகளானது!

சிமிழி விளக்கு எரியும்போது தொட்டால்
சுடும் என அறிகிறது!

தடுத்த கைகளை நன்றியோடு தேடியது!
நேற்றைய பிஞ்சு விரல்கள்!

காண முடியாத தூரம் போய்விட்டது அனுபவ கைகள்!

     

2 comments:

  1. உண்மை! சிறப்பான வரிகள்!

    ReplyDelete
  2. நல்ல செய்தி சொல்லும் கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete