ஓர் இனம்!
நானும் !
புரோட்டாவும்!
அடிபட்டாலும்!
சுவை தருகிறோம்!
----------------
புரோட்டா!
என்னை சுடுவதும்-
நான் தொடுவதும்-
ஓர் தொடர்கதை!
ஆதலால்தானோ!?-
சுடும் வார்த்தைகளும்-
என்னை துவளச்செய்வதில்லை!?
-----------------
புரோட்டாவே!
நீயோ!
எண்ணெய் ஊற்றாவிட்டால் ''கருப்படிக்கிறாய்''!
என்னவளோ!
என்னைக்கண்டாலே கடுப்பாகிறாள்!
-----------------------
திரியில்லாத மெழுகுவர்த்திகள்-
நாங்கள்!
உறவுகள் ஒளி பெற-
நெருப்போடு உறவாடுபவர்கள்!
-----------------------
''விசிற''முடியுமா.!?
இடையில் கிழிந்திடுமா.!?
தொட்டவுடன்
சொல்லிவிடும்
புரோட்டா மாவு!
வாழ்வில் வசந்தமா.!.?
வாழ்வை முடிக்கும் விஷமா.!?
அர்த்தம் தர மறுக்கிறது
வஞ்சியவளின் சிரிப்பு!
அட...! வித்தியாசமான சிந்தனை...
ReplyDeleteசகோ பாலன்!
Deleteகருத்திற்கு நன்றி!
வித்தியாசமான சிந்தனை சீனி.
ReplyDeleteபாராட்டுகள்.
சகோ ,வெங்கட்!
Deleteகருத்திற்கு நன்றி!