Thursday, 24 April 2014

நரிகளும்-கன்றுகளும்!

பிரமாதம்,பிரமாதம் என
ஆரவாரம் செய்கிறது
நரிகள் கூட்டம்!

இதனைக்கேட்டு
தத்துகிறது
தாவுகிறது
இளங்கன்றுகள் கூட்டம்!

கைத்தட்டல்கள் அதிர்கிறது!

துள்ளல்கள் தொடர்கிறது!

கன்றுகள் சோர்ந்திட தொடங்குகிறது!

நரிகள் நாக்கில் எச்சில் ஊறுகிறது!

நரிகள் மாறுவதாக இல்லை!

கன்றுகள் உணர்வதாக இல்லை!

        

2 comments:

  1. அருமை! கன்றுகள் உணராமல் போனதால்தான் கறியாகி விடுகின்றன!

    ReplyDelete
  2. கன்றுகள் உணர்ந்து கொள்ளப் போவதில்லை..... நரிகளும் உண்ணாமல் இருக்கப் போவதில்லை.... :((((

    ReplyDelete