Friday 4 April 2014

பிறந்த பூமி !(43)

மேகங்கள் ஒன்று சேர்ந்தது-
''சோ''வென கொட்டியது மழை!

குளிர குளிர குளிக்கச்செய்தது-
''ஓ''வென அழுத மக்களை!

மழை விடாமல் பெய்தது!
நீதிபதிகளையும்,மருத்துவர்களையும் ஒதுங்க செய்தது!

மழை ஓய்ந்தது!
தொங்கிய சடலம் இறக்கப்பட்டது!

சடலத்தை பார்த்து சிலையானார்கள்!
நீதிபதியும்!
மருத்துவரும்!

தூக்கிலிட்டால்-
கண்களும்,நாக்கும்-
வெளியே தள்ளியிருக்கும்!

இப்படி எதுவும் இல்லாதது-
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கு!

எப்போது இவர் இறந்தார்!?

இறந்த பிறகா இவர் தொங்கினார்!?

மாறி மாறி கேள்வி கேட்டுக்கொண்டனர்!
விடை தெரியாமல் திகைத்தனர்!

முடிவுக்கு வந்தனர்!

பெரிய கதவை திறந்துவிட சொல்லினர்!

பாதுகாப்பான வழியில் அவர்கள் சென்றுவிட்டனர்!

திறக்கப்பட்ட கதவின் வழியே மக்கள் நுழைந்தனர்!

கண்ணீரால் மறுபடியும் குளித்தனர்!

அல்கரீமி கூட்டத்திலிருந்தார்!

முக்தார் அலியும் கதறிக்கொண்டிருந்தார்!

பிரேதம் தூக்கப்பட்டது!

சுமந்துக்கொண்டு கூட்டம் கிளம்பியது!

நேசித்த மண்ணின் மீதும்,மக்கள் மீதும்-
மிதந்து சென்றார்!
உமர் முக்தார்!

சமுத்திரத்தில் கலந்திட்ட மழைத்துளியை கண்டறிய இயலாது!

லட்சியவாதிகள் சிந்தும் ரத்தங்கள்,கோழைகளையும் வீறு கொண்டு எழச்செய்யாமல் விடாது!

ஒரு உமர் முக்தார் சுவாசிப்பதை  நிறுத்தினார்!

ஒரு தேசத்தையே பிறந்த மண்ணை நேசிக்க வைத்திட்டார்!

(தொடரும்....!!)

4 comments:

  1. // கோழைகளையும் வீறு கொண்டு //

    சிறப்பு...

    ReplyDelete
  2. ஹ்ம்ம்....
    அடுத்து என்ன?..தொடர்கிறேன்..

    ReplyDelete
  3. அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete