Monday 21 April 2014

கருவாச்சியோட சில நாட்கள்!

கருவாச்சி கைய பிடிச்சேன்!
காடு கரயெல்லாம் போய் வந்தேன்!

பேருதான் கருவாச்சி!
மனசு தங்கமா மின்னுச்சி!

கட்டுனவனால கருமாயம்!*
கஞ்சிக்கும் கருமாயம்*!

சாவைத்தொட்டு பெத்தெடுத்தா
மவன் ஒன்னு!

பேரு வச்சா அழகு சிங்கம்னு!

அவன் அழகு சிங்கமில்ல
அழுக்கு சிங்கம்!

கருவாச்சியோட கண்ணீரு
என் கண்ணிலும் ஊறியது!

ஒதுங்கினேன்!

முடியாமல்
மீண்டும் தொடங்கினேன்!

அவ உணர்வை
நானுணர்ந்தேன்!

பொறந்த மண்ணை நேசிப்பதால்
இப்படியென அறிந்தேன்!

பாதகத்தி போன பாதையெல்லாம்
பட்ட தீட்டுன கத்தி!

அவ பட்ட கஷ்டம்!
அவ அடஞ்ச அனுபவம்!

எந்நெஞ்ச வருடுச்சி!
சிந்தன வெதைகள வெதச்சிச்சி!

வைர முத்து அவுக ஒழப்பானது!
ஒவ்வொரு பக்கமும் சொன்னது!

நீங்க படிச்சி பாருங்க!

இங்கே இருந்தே
 இன்னொரு ஊருக்கு
போய் வருவீங்க!

(வைரமுத்து அவர்களது எழுத்துப்படைப்பான கருவாச்சி காவியத்தால் வந்த எழுத்துக்கள்தான் அது)
     

6 comments:

  1. அருமை..நீங்க எதப் படிச்சாலும் அழகு கவிதையா இங்க வந்துடுதே...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான வரிகள் அவை..

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ம்ம் அருமை கவி சகோ!

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு. இதுவரை படித்ததில்லை. படிக்க முயல்கிறேன்.

    ReplyDelete