Friday 13 July 2012

துறவறமும்- இறை வரமும்!



படைத்தவனே!
பரிபாலிப்பவனே!

உணர்ச்சி வெளிப்பாடாய்-
மானுட உற்பத்திக்கு-
வழி வகுத்தாய்!

உணர்வுள்ள மனிதனுக்கு-
"அளவோட" உணர்ச்சி-
வெளிக்காட்ட -
"வழி காட்டி"தந்தாய்!

வெள்ளத்தை -
அணை போட்டு தடுக்காவிட்டால்-
ஊருக்கு ஆபத்து!

"தடுத்தே" வைத்தால்-
அணைக்கு ஆபத்து!

அளவாக திறந்து விட்டால்-
அணையும் பிழைக்கும்!

நாடும்-
தழைக்கும்!

அது போன்றே-
நீயே!

துறவறத்தை -
வாழ்வாக்காதவனே!

வாழ்வினுள்ளே-
துறவறத்தை-
வைத்தவனே!

"படைப்புகளை"-
தவிர்த்து-
படைத்தவனை-
வணங்கிட சொன்னவனே!

ஒரு நாளைக்கு-
இருபத்து நான்கு மணி நேரம்-
வைத்தவனே!

ஐந்து நேர வணக்கத்தை-
கடமையாக்கியவனே!

ஐந்து நேரத்திற்கு ஆகும்-
நேரம்-ஐம்பது நிமிடம்தானே!

வருடத்தில் பதினோரு மாதம்-
"நல்லவற்றை புசியுங்கள்"-
என்றவனே!

ஒரு மாதகாலம்-
மட்டும் -
குறிப்பிட்ட நேரத்திற்கு-
தடை விதித்தவனே!

வட்டியை தடுத்தவனே!

வியாபாரத்தை-
ஆகுமாக்கியவனே!

"இருப்பதில்" சிறிதளவு-
"இல்லாதவர்களுக்கு"-
கொடுப்பது கடமை என்றவனே!

பொருளாதார வசதி-
இருக்குமேயானால்-
புனித யாத்திரை-
மேற்கொள்ள சொன்னவனே!

குறிப்பிட்டு-
ஒதுக்கிய நேரங்களும்!
குறிப்பிட்ட கால-
"ஒதுங்கல்"களும்!

குறிப்பிட்ட அளவு-
கொடுப்பதுவும்!
குறிப்பிட்ட அளவுக்கு மேல்-
இருக்கும்போது-
குறிப்பிட்ட இடத்திற்கு-
செல்வதுவும்!

வாழ்வையே-
துறக்கவில்லை!

வாழ்வினுள்ளே-
துறவு நிலை!

துறவு நிலையவும்-
இலகுவாக்கிய-
இறைவா !
இது உன் -
வரமே!

கடலை மையாகவும்-
மரங்களை எழுது கோலாகவும்-
ஆக்கினாலும்- உன்
கண்ணியத்தை எழுதிட முடியாதன-
சொன்னவனே!

நான்-
என்னத்த எழுதிட முடியும்-
இந்த "அற்ப"துளியில்-
வந்தவனே......!!



15 comments:

  1. வாழ்வினுள்ளே-
    துறவு நிலை!

    துறவு நிலையவும்-
    இலகுவாக்கிய-
    இறைவா !
    இது உன் -
    வரமே!

    வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வழக்கம் போல கலக்குறீங்க :)

    ReplyDelete
  3. //"தடுத்தே" வைத்தால்-
    அணைக்கு ஆபத்து!// சொல்லியதை அடுத்த வரியில் அழுத்தமாக மாற்றியது அற்புதம்

    ரமலான் நோன்பிற்கான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //நான்-
    என்னத்த எழுதிட முடியும்-
    இந்த "அற்ப"துளியில்-
    வந்தவனே//

    நெஞ்சு படபடக்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை.
    மார்க்கத்து மகிமையை
    எளிமையாக புரியவைக்கும் வரிகள்.

    ReplyDelete
  6. அன்புள்ள சீனி..
    உங்க Followers திரும்ப கிடைச்சுட்டாங்களே..
    இப்ப சந்தோஷம்தானே?

    ReplyDelete
  7. கடைசி வரி கச்சிதம்.....அஸ்லாம் அலைக்கும் சகோ...

    ReplyDelete
  8. satees!

    wa alaikkum!
    mika nantri!

    assalaamu alaikkum enpathai-
    neengal "aslaam alaikkum"-
    entru solli irukkeenga!

    ReplyDelete
  9. இறைவரம் நிறைவாகக் கிடைக்க என் வாழ்த்துகள் சீனி !

    ReplyDelete