Sunday 15 July 2012

 துரத்தும்  எண்ணங்கள்....



பொத்தி வளர்த்த புள்ளை-
போதையில கிடக்குறான்-
தெரு நாயோட!

கூன் விழுந்த முதுகோட-
தாயானவள் -
தேடி அலைகிறாள்-
கவலை தோய்ந்த முகத்தோட!

அரசோ !-
"விற்றதை" சாதனையாக-
சொல்லுது-
பந்தாவோட!

சட்டமே சொல்லுது-
குற்றம் நிரூபிக்கும் வரை-
"ஒருவன்"குற்றவாளி-
இல்லை-என!

ஊடகங்கள் ஊளையிடுது-
அவனை தீவிரவாதி-
என!

"அதிகாரிகள் "சொல்வதையெல்லாம்-
வெளியிடுவதற்கு!

தட்டச்சு இயந்திரம் -
போதும் -அதற்க்கு!

"பத்திரிக்கை "என்ற-
பேர்-எதற்கு!?

"வேஷம்" கட்டுபவர்கள்-
பிறந்தநாளுக்கு-
சுற்றுலா போய்டுவார்-
வெளி நாட்டுக்கு!

"வேலை வெட்டி "இல்லாமல்-
"இவன்"கொண்டாடுறான்-
கொடுமைக்கு!

உண்ணா விரதம்-
இருக்காங்களாம்!

காரணம்-
"அவரு" படம்-
நடிக்கலையாம்!

நடித்தால் அவருக்கு-
காசு!

வேலைக்கு போனால்தான்-
உனக்கு அடுத்த வேலை-
சோறு!

"முட்டிகொள்வார்கள்-"
ஒரு வயித்தில் பிறந்தவர்கள்-
வாழும்போது!

முட்டி முட்டி அழுவார்கள்-
யாராவது ஒருவர்-
"தவறி" விட்ட போது!

தனி தொகுதி-
கொடுத்தாச்சி!

"தனி" குவளை முறை-
மாறிடிச்சி!!?

எவ்வளவோ -
அவலங்கள் -
ஒவ்வொரு நாளும்!

"அவை" அலைக்கழிக்குது-
என்னையவும்!

ஆற்று மணலில்-
சட்டை இல்லாமல்-
படுத்தும்!

வானத்தை வெறித்தே-
பார்த்தும்!

தூக்கம்தான்-
வரவில்லை!

"துரத்திய எண்ணங்கள்"-
எழுதும்வரை-
விடவில்லை!

23 comments:

  1. எண்ணங்கள் - சவுக்கை சுழற்றி உள்ளீர்கள்

    ReplyDelete
  2. சமூக அவலங்களை அத்தனை வலிகளோடு சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் சாட்டையடி...

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. அருமை அருமை :)

    ReplyDelete
  5. எல்லாமே எண்ணங்களாய்த் துரத்துதுங்க நண்பரே!

    ReplyDelete
  6. எண்ணத்தின் வலிகள் வரிகளில் தெரிகிறது அண்ணா!
    அனைத்தும் நிதர்சனம்! நித்தம் எங்கேயோ தோற்கிறோம் எதையோ இழக்கிறோம் என்பதை அறியாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
  7. ///"வேஷம்" கட்டுபவர்கள்-
    பிறந்தநாளுக்கு-
    சுற்றுலா போய்டுவார்-////

    மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்று அப்படியெ ஒப்பித்து விட்டீர்களே அருமை...

    ReplyDelete
  8. ஐயோ நான் ஐயாவா...

    நான் ஒரு குமர் பொடியன் சகோ

    ReplyDelete
    Replies
    1. appudiyaaa!?

      ungal ezhuthi muthirchiyai padithu ivvaaraaka-
      enni vitten!

      inimel sakotha......!(raa "vaa ri" yaa!?)

      Delete
  9. அடியேன் சகோதரன் தான்..

    ReplyDelete
  10. அருமை சீனி. தொடர ஆரம்பித்தேன். தொடர்ந்து வருவேன்...

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி

    ReplyDelete
    Replies
    1. nagaraaj!

      anne!

      ungal muthal varavukku mikka nantri!
      anne!

      thodarkiren!

      Delete
  11. தனி தொகுதி-
    கொடுத்தாச்சி!

    "தனி" குவளை முறை-
    மாறிடிச்சி!!?


    யாராலும் பதில் சொல்ல முடியா தீ கேள்வி...

    ReplyDelete
  12. எத்தனை அசிங்கங்களுக்கு நடுவில் நம் வாழ்க்கை.....கஸ்டம்தான்.ஆனால் வழியில்லை.வாழ்ந்தே ஆகணும் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      unmai mikka nantri!
      vanthathukku!

      Delete