Saturday 21 July 2012

துண்டிக்க வேணாம்...!



வந்த-
"வழியும்"!

தங்கிய-
"அறையும்"!

பால்கொடுத்த-
மார்பும்!

வளர்த்த -
சொந்தங்களும்!

அமுதூட்டிய -
கைகளும்!

பாசம் தந்த-
மனங்களும்!

எல்லாமே -
ஒண்ணுதான்!

பெற்ற பிள்ளைகளிடமோ-
குணநலன்களோ-
வேறுதான்!

நம்மோடு பிறந்து-
வளர்ந்தவர்களிடமே -
"மாறு பாடுகள்"-
என்றால்!

வரும் மருமகள்-
நம்மை போலவே-
எப்படி இருப்பாள்!?

அவள்-

பிறந்ததும்!

வளர்ந்ததும்!

பழக்க வழக்கமும்!

பேச்சு முறையும்!

வேறு பாடாக-
இருந்திருக்கும்!

இரு வேறு-
உறவுகள்!

எப்படி உடனே-
காண முடியும்-
மாற்றங்கள்!

"வந்தவள்"-
வீட்டுக்கு வந்த-
வேலைக்காரி அல்ல-
அவள்!

வாழ வந்த-
வம்ச விருத்திக்கு வந்த-
உறவு அவள்!

கணவன் -
மனைவிகளுக்கிடையே-
பிரச்சனைகள்-
குறைவு!

"இவர்களின்"உறவுகளுக்கிடையே-
பேராசைகள்தான்-
நிறைவு!

"உங்கள் "குடும்பங்களின்-
பேராசையால்!

வாழ வேண்டிய-
இரு உள்ளங்கள் வாட வேண்டுமோ-
நிராசையால்!

ஊரான் பிள்ளையை-
"ஊட்டி"வளர்த்தால்-
தன் பிள்ளையை-
"கொடைக்கானல்"வளர்க்குமா!?-என
கேட்க கூடாது!

கர்பவதியான-
மருமகளை-
ஊட்டி வளர்த்தால்-
அவள் வயிற்றில் உள்ள-
நமது உயிர் வளர்வதை-
மறந்திடலாகாது!

வாழ்வில் இரணம்-
கூடிடவும்!
ஆயுள் கூடிடவும்-
உறவுகளுடன்-
சேர்ந்து வாழுங்கள்!
நபி மொழியே!

இதை விட -
எந்த வார்த்தைகள்-
எழுதி உறவின் மேன்மையை-
நான் மொழிய..!!?



18 comments:

  1. மருமகளை மகளாக நினைக்கும் பெண்கள் குறைவே... பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  2. அழகு நபி மொழி......

    ReplyDelete
  3. கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உறவின் பாசம் உயிர்த்துடிப்புடன் பொதிந்துள்ளது. குறிப்பிட்டு எந்த வரியையும் சொல்லமுடியவில்லை. அவ்வளவு வரிகளும் அருமை!

    ReplyDelete
  4. சரியாகச்சொன்னீர்கள்.இது புரிய வேண்டிய எல்லோருக்குமே புரிந்தால் நாளை பகை என்று ஒன்றில்லையே!!!வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
  5. கர்பவதியான-
    மருமகளை-
    ஊட்டி வளர்த்தால்-
    அவள் வயிற்றில் உள்ள-
    நமது உயிர் வளர்வதை-
    மறந்திடலாகாது!//

    கவிதையின் கருவும்
    அதைச் சொல்லி சென்ற விதமும்
    வழக்கம்போல் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உறவுகள் என்பது
    உற்றவற்றை பகிர்ந்து
    உன்னத வாழ்வு வாழ்ந்திடவே
    உணர்வுகளை அக்கினிக் கணைகளாய்
    மாற்றிவிட்டால்
    சிறகு முளைத்து பறந்து விடுமென
    அருமையான வரிகளால்
    அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. neengal ezhuthya kavithai-
      piramaatham!

      vanthathukku karuthukkum mikka nantri!

      Delete
  7. ஆதங்கம் புரியுது - இது எல்லாம் எருமை மாட்டின் மேல் பெய்யும் மழை...அம்புட்டுதேன்..

    எப்ப புரியும் என் மக்களுக்கு????????

    ReplyDelete
  8. தங்களிடம் ஒரு சின்ன கோரிக்கை,இந்த கவிதையை அப்படிய்யே ஒரு சிறுகதையாக மாற்றி எழுத முயற்சிக்கலாமே?நல்ல் கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. vimalan!

      ungaludaya karuthukku mikka nantri!

      siru kathai ezhuthida paniyin kaaranathaal mudiyaatha kaariayam...
      aanaalum muyarchikkalaam....

      Delete
  9. நபி மொழியில் எத்தனை தத்துவம்.உணர்ந்து வாழ்ந்தால் எத்தனை சந்தோஷம் !

    ReplyDelete