Tuesday 2 October 2012

கலங்காதிரு....



"வந்தது"-
கோடி!

"சேர்ந்தது"-
ஒன்று மட்டும்-
கருவறை-
தேடி!

ஆரம்பித்தது-
தேடலும்-
ஓட்டமும்-
பிறப்புக்காக!

முடங்குவதும்-
முனங்குவதும் -
ஆகிடுமா!?-
வாழ்வின்-
அர்த்தமாக!?

"வரவில்"-
இல்லை-
பொட்டு துணி!

"போகையில்"-
உண்டு-
ஒத்த துணி!

இடையில் -
வெல்ல நீ!-
"துணி!"

கொட்டும் தேனீயால்-
மருந்தும்-
உண்டு!

வரும் சோதனையால்-
பாடங்களும்-
உண்டு!

மண்ணை பிளக்க-
வீரியம் உள்ளதால்-
விதை புதைகிறது!

தாங்கிடும் தன்மை-
உள்ளதால்தான்-
சோதனையும்-
வருகிறது!

வானம்-
பூமி-
காலமெல்லாம்-
ஒன்றுதான்!

"வந்தவர்களும்-"
"போனவர்களும்-"
உண்டுதான்!

வென்றவர்கள்-
என்றும்-
மனங்களில்-
இடம் உண்டுதான்!

விடியாத-
இரவுகளா!?

நகராத-
மேகங்களா!?

நம் சோகங்கள்-
ஒரு நாள்-
விலகாதா!?

"கஷ்டத்தில்-
இலகு உள்ளது!
நிச்சயமாக-
கஷ்டத்தில்-
இலகு உள்ளது"-
இறை வாக்கு!

படைத்தவனின்-
வாக்கு இப்படி இருக்கு!

கவலைகள்-
ஏன் நமக்கு...!?





9 comments:

  1. ///"வரவில்"-
    இல்லை-
    பொட்டு துணி!

    "போகையில்"-
    உண்டு-
    ஒத்த துணி!

    இடையில் -
    வெல்ல நீ!-
    "துணி!"///

    உண்மை வரிகள்... துணிவே துணை...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவலைகள்-
    ஏன் நமக்கு...!?
    //uNmai varikaL sakoo.arumaiyaana eliya wataiyil amaiyappeRRa kavithai ithu.vaazththukkaL.

    ReplyDelete
  3. கவலைகள்-
    ஏன் நமக்கு...!?
    தன்னம்பிக்கை வரிகள்.

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை மிக்க வரிகளை எழுதி இருக்கிறிர்கள்...மிகவும் அருமையாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. அருமை....அருமை.............

    ReplyDelete