Monday 22 October 2012

நான் என்ன செய்வேன்..!!? (9)

 அறிய முற்பட்டான்-
இனியவன்!-
"சொன்னது"-
செய்தியா!?

இல்லை-
வதந்தியா!?

அஸ்ஸாமில்-
"அநியாயங்கள்-"
நடந்தேறியது!

வடகிழக்கு மக்களுக்கு-
தென்னிந்தியாவில்-
ஆபத்து என-
"வதந்தீ"-
பரப்பப்பட்டது!

அம்மக்களும்-
தென்னகத்தை விட்டு-
வெளியேறியது!

உணவு பொட்டலங்கள்-
"கலாசார காவலர்களால்-"
வழங்கப்பட்டது!

கோபத்துடன் கிளம்பிய-
மக்கள் -ரயிலிலேயே
சிலரை தாக்கியது!

அரசு-
வதந்தி பரப்புவதை-
தடுக்க நடவடிக்கை-
எடுத்தது!

அதில்-
இருபது சதவிகிதம்-
இணையங்கள் -
"அக்காவலர்கள்"-
இணையங்களை-
உள்ளடக்கியது!

சிறுபான்மை மக்களின்-
மேல் -சுமத்தப்பட்ட-
"கறையை"-
யார் நீக்குவது!?

உண்மையா-!?-என
அறிய-
ஆவல்கொண்டான்!

வஞ்சியவளிடம்-
கேட்டுவிட-
வீட்டை -
சுற்றினால்!

அவளோ!?-
தன்னை -
சுற்றுவதாக-
எண்ணி -
கொண்டாள்!

வானில் -
எப்போதாவது-
மின்னல் வெட்டும்!

இவன் போகும்போதெல்லாம்-
ஜன்னல் வழி-
"அம்மின்னல்" -
எட்டிபார்க்கும்!

கத்தி குத்து-
நடந்தாலும்-
எட்டி நின்று-
பார்க்காதவள்!

எட்ட- இவன்-
வந்தால்-
கதவை தட்டி கொண்டு-
பார்க்கிறாள்!

அவளின்-
 உறவுக்காரருக்கு-
குழந்தை பிறந்து-
இருந்தது!

அவளது-
குடும்பமே-
பேருந்துக்காக-
நின்றது!

கயழ்விழியை-
இவன்-
விழிகள்-
தேடியது!

அவளது-
முகம் அங்கு-
காணாமல்-
போய் இருந்தது!

வீட்டில்-
நிச்சயம்-
இருப்பாள்-
தனியாக!

எப்படியும்-
தெரிந்திடனும்-
விஷயத்தை-
உறுதியாக!

தொலை பேசி-
எண்ணை விசாரித்து-
வைத்து இருந்தான்!

ஒதுக்கு புறமான-
பொது தொலைபேசியில்-
எண்களை அழுத்தினான்!

குர்ர்ர்ர் .......
குர்ர்ர்ர்.....-.என்ற
சப்தம்!

தொலைபேசி-
எடுக்கும் வரை-
இவனை "கூறு "போட்டது-
அச்சத்தம்!

எடுக்கப்பட்டது-
தொலை பேசி!

சற்று-
தாமதமானது-
இவன் பேச்சி!

"ஹலோ ! யாரு..!?
"ஹலோ! யாரு!?-
அவளது குரல்!

உள் நாக்கில்-
ஒட்டிகொண்டது-
இவன் குரல்!

சற்று திணறி-
நான்-
இனியவன்-
பேசுறேன்-
என்றான்!

சற்று -
மூர்ச்சை ஆனாள்-
சுதாரித்து-
"சொல்லுங்க..-"
என்றாள்!

பேசிட-
ஆயிரவார்த்தைகள்-
இருந்தது!

அலைகடலில்-
ஆட்பட்டவர்களாக-
இவர்கள் நிலை-
இருந்தது!

இனியவனிடம்-
காசு போட்டு -
பேச கூட-
பணம் இல்லாமல்-
இருந்தது!

கேட்டான்-
வெள்ளையன்-
சொன்னதெல்லாம்-
உண்மையா!?

கொஞ்ச நேரம்-
இருந்தாள்-
ஊமையாக!

அவள்-
கேட்டாள்-
"ஏன் நீங்க-
நம்பலையா!?

பதிலுரைத்தான்-
இல்லை-
உறுதிபடுத்தி -
கொள்ளத்தான்! ?

சொன்னாள்-
உண்மையாகத்தான்!!

அனுமதித்த -
நேரம் -
முடிந்து விட்டது!

தொடர்பு-
துண்டிக்க பட்டது!

பதில்-
என்னவோ-
நேர்மறை தான்!

இவனோ-
கைகளுக்குள்ளே-
கவலையாக-
முகம் -
புதைத்தான்!

(தொடரும்...)




15 comments:

  1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. balan sako..!

      thodar anpirkki mikka nantri!

      Delete
  2. கவிதை தொடர் எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிட்டிருக்கிறது!

    ReplyDelete
  3. பதில்-என்னவோ- நேர்மறை தான்! -nice..

    ReplyDelete
  4. ஆஆஆ...
    தொடருங்கள் எதிர்பார்க்கிறேன் அடுத்த சுவாரஷ்யத்தை

    ReplyDelete
  5. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது...தொடருங்கள்....எதிர்பார்க்கிறேன்...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. உண்மை தான் என்ற பிறகும் எதிர்மறையா...?

    தொடருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. aruna...!

      mikka nantri!

      thodarnthamaikku...

      Delete
  7. சுவாரஸ்யமாக இருக்கிறது...தொடருங்கள்

    ReplyDelete
  8. தொடருங்கள்...தொடருகிறேன்...

    சரஸ்வதி பூஜை தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete