Saturday 25 February 2012

பனி!

நெருக்கத்தின்-
இனிமையை-
பிரிவின்போது-
விளக்குவது!
----------------------
நினைத்து கொள்வேன்-
காதலித்த தருணங்களை!

"வாட்டாமல்"-இருக்க
"வாடை" என்னை!
------------------------------

அழியுது காலையிலேயே-
முற்றம் தொளிக்கும்-
முறை!

எனக்கு ஒன்னும்-
இப்ப கவலை-
இல்ல!

தொளிக்க நீயும்-
நீயும் இல்ல!

பார்த்து நனைய-
நானும் இல்ல!
---------------------------
வாய்ப்பு இருந்தும்-
பேச மறுத்தவள்-
நீ!

தினமும் உன்-
நேசத்தை சொல்லி-
விடுகிறது-உன் வீட்டு
பூ!
----------------------------
காதை அடை-
குளிர் தெரியாமல்-
இருக்க!

என்ன செய்ய-
உன் நினைப்பு-
வராமல் இருக்க!
------------------------
வானத்தில் காட்சி-
மேகம் நிலவை-
உரசி செல்வது!

அதே காட்சி-
என் தெருவில்-
மேகம் போல-
பனியில்!
நிலவை போல-
என்னவள் செல்வது!
--------------------------
மேலே குளிரும்-
உள்ளே சுடும்-
கண்மாய் தண்ணி!

குளிரையும்-
சூட்டையும்-இரண்டையும்
அடைகிறேன்-
உன்னை எண்ணி!
----------------------------
பனி காலம்-
மண்ணை ஈரப்டுத்துது!

அதே காலம்-
என்னை பாடா படுத்துது!
-------------------------------
பகலவன்-
பனியின் துளியை-
பஸ்பம் ஆக்குது!

உன் நினைவோ-
என்னை துரும்பாக்குது!!
------------------------------------

6 comments:

  1. superaa irukku thambi

    ReplyDelete
    Replies
    1. kalai;

      neengal sonna karuthukkum-
      vanthathukkum-
      rompa nantri !
      akkaa!!

      Delete
  2. அருமை ஒவ்வொரு வரியும் .

    ReplyDelete
    Replies
    1. sasikala!
      ungal varavukku-
      mikka nantri!

      enathu account gmail-
      ungal bloggaril inaiya mudiyavillai!

      eppadi inaiya aalosanai -
      sollunga!

      Delete
  3. காதலின் சுகம் ஒவ்வொரு வரிகளிலும்.காதலை எப்படிச் சொன்னாலும் சுகமோ ஒருவேளை !

    ReplyDelete
    Replies
    1. hemaa !
      ungalukku rompa nantri!

      vanthathukkum-
      karuthu sonnathukkum!

      Delete