Wednesday 24 July 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (21)

தாயார் -
ஆமினா!

செல்ல நினைத்தார்-
மதீனா!

தன் கணவர் (அப்துல்லா)-
மண்ணறையை  கண்டு வர!

மன அமைதி பெற!

மகனுடனும்-
மாமனாருடனும்-
பயணமானார்!

ஒரு மாதகாலம்-
தங்கினார்!

நோய் வாய்ப்பட்டவர்!

திரும்பி குடும்பத்துடன்-
வரவில்லை!
ஆமினா!

"திரும்ப முடியாத-"
பயணமானார்-
ஆமினா!

முஹம்மது(ஸல்)-
பிறக்கும் முன்-
தந்தையையும்-
பிறப்பிற்கு பின்-
தாயையும்-
இழந்தார்!

சிறுவனான-
முஹம்மது (ஸல்) வை-
பாசத்தில் நனைத்தார்-
பாட்டனார்!

மேலும்-
வயோதிகமான-
அப்துல் முத்தலிபு!
(பாட்டனார்)

தனக்கு-
 பிறகு-
பேரனை வளர்க்கும்-
பொறுப்பு!

தன் மூத்தமகன்-
அபூதாலிபுவை-
சாரும்!

அபூதாலிபும்-
முஹம்மது (ஸல்) வை-
நேசித்ததை-
வரலாறுகளே-
பறை சாற்றும்!

பன்னிரண்டு வயதான-
முஹம்மது (ஸல்)-
அவர்கள்!

பெரியதந்தை-
அபூதாலிபுடன்-
வியாபார கூட்டத்துடன்-
சென்றார்கள் !

ஷாம் தேசம்-
வந்தார்கள்!

அத்தேசத்தில்-
"புஸ்ரா" பகுதியை-
அடைந்தார்கள்!

இவர்களை-
பிளந்துகொண்டு-
வந்தார்-
பஹீரா எனும்-
துறவி!

முஹம்மது (ஸல்) வை-
பார்த்து சொன்னார்-
இவர் இறுதி தூதர்-என்றார்
மருவி மருவி!

அபூதாலிபு கேட்டார்-
எப்படி-
 உங்களுக்கு தெரியும்-என
துறவியிடம்!

அடையாளத்தை-
துறவி சொன்னார்-
அவர்களிடம்!

அவர்கள்-
வரும்போது நடந்த-
"அதிசயத்தை"!

முஹம்மது (ஸல்)-
இடது தோல் -
புஜத்திற்கு கீழ்-
ஆப்பிள் போன்ற-
முத்திரை இருக்கும் -
என்பதை!

தங்களது-
வேதங்களில்-
இதனை-
சொல்லி இருப்பதை!

மேலும் துறவி-
சொன்னார்-
இச்சிறுவனுக்கு-
ஆபத்து ஏற்படலாம்-
ரோமர்களாலும்-
யூதர்களாலும்-
என்பதை!

அபூதாலிபு-
அதிர்ந்தார்!

சில வாலிபர்களுடன்-
முஹம்மது (ஸல்)வை-
மக்கா அனுப்பினார்!

(தொடரும்....)






6 comments:

  1. தொடர்கிறேன்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. அருமை! தொடர்கிறேன்! உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்! என் தளம் சென்று பாருங்கள்!

    ReplyDelete
  3. தொடர் எழுதுகிறீர்கள் சீனி.நிறைய நாட்களுக்குப்பிறகு காண்கிறேன்.சுகம்தானே.சந்திப்போம் எழுத்துக்களோடு.வாழ்த்துகள் !

    ReplyDelete

  4. வணக்கம்!

    அல்லா திருவருளால் சீனி அளிப்பவை
    எல்லா இனிக்குமென ஏத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. அபூர்வ அறியாத தகவல்களை
    தங்கள் பதிவின் மூலம்
    அறிந்தபடித் தொடர்கிறேன்

    ReplyDelete