Saturday 11 February 2012

வேண்டாமே...

பார்த்தாலே-
" தீட்டு-"என -
எண்ணுகிறவர்களே!

நாம்-
சுவாசிக்கும் காற்றில்-
"அவனின்"-
மூச்சு காற்றும்-
இருக்கும்தானே!

இது எந்த ஊரு -
நியாயம்டா !?

செத்த மாட்டு தோலை -
உரிச்சதுக்கும்!

மனித மலத்தை-
அவன் வாயில்-
 திணிச்சதுக்கும்!

வாராங்க -
மாறி மாறி-
ஆட்சிக்கு!

ஏன் மாறமாட்டேன் -
"இரட்டை குவளை "-
முறையிலிருந்து!

"தீட்டுங்குறான்-"
எடுத்ததுகெல்லாம்!

தீண்ட தகாதவனின்-
கைகள் படாமல்-
இருக்குமோ-
அவன் உடுத்தும்-
உடைகளெல்லாம்!

மனம் வெறுப்பதில்லை-
வண்ணங்களை!

மனிதன் என்றால்-
ஏன் பாக்குறான்-
வர்ணங்களை!!?

வாழ்வாதரத்துக்கு தானே-
பார்க்கிறான்-
தொழிலை!

"சாதியை" உருவாக்கலாமா?-
தொழிலின் அடிப்படையிலே!

பாதுகாக்க வேண்டுமாம்-
மாடுகளை!

மனிதன் என்றால்-
"பார்த்து கொல்கிறான்"-
மதங்களை!

ஏன் இந்த -
அகங்காரம்-?!

உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம்?

மனிதன் வாழ -
தேவை -
மனித நேயமே!

மனிதத்தை "கொல்லும்"-
"தீண்டாமை"-
வேண்டாமே!!

8 comments:

  1. எப்பிடித்தான் கத்தினாலும் தீராத பிரச்சனை இது நம்ம நாடுகளில்.கஸ்டம் சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      thappai thappu ena -
      sollathaan aalvem!

      athu kooda illaathathu thAan_
      kodimai!

      ungal varavukkum-
      aatharavukkum-
      nanatri!

      Delete
  2. சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. munaivar avarkale!

      enakku muthal muthal
      neengal thaan karuththurai-
      itteerkal!(ippadikku..)

      ungalin aalosanai-
      enakku thevai!
      ungal varavukkum-

      karuthukkum-
      nantri!

      Delete
  3. உயர்ந்தவன் -
    தாழ்ந்தவன்-
    என-எவன் தந்தான்
    அங்கீகாரம்?

    அருமையான அனைவரின் பொடனியிலும்
    அடித்தது போன்ற அருமையான கேள்வி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. AYYA Ramani avarkale!
      ungalathu karuththai kaanaamal
      kavithaigaludan naanum-
      eangi poivitten!

      ungalathu karuthukkum-
      vimarsanathirkkum mikka nanytri!

      Delete
  4. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமுதாயமும் கலந்து படிக்கும் ஒரு அரசுப் பள்ளியில் ஒரு தலித் மாணவன் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குடத்தருகே தாகத்துடன் சென்று தம்ளரில் கைவைத்தான். பறந்து வந்த ஒரு பிரம்பு சிறுவனின் கண்ணைப் பதம் பார்த்தது. பிரம்பை யார் எறிந்தது? வாத்தியார்தான். உயர் குலத்து பிள்ளைகள் குடிக்கும் தம்ளரை எப்படி தொடலாம்? என்ற ஆத்திரம், அநியாயமாய் ஒரு அப்பாவிச் சிறுவனின் கண்ணைப் பலியாக்கியது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தைப் பற்றி கவிமாமணி தி.மு. அப்துல் காதர் எழுதினார்:
    நம் நாட்டில் விலைவாசி ஏறிவிட்டது..
    ஒரு தம்ளர் தண்ணீரின் விலை ஒரு கண்ணா?

    ReplyDelete
    Replies
    1. Asarath! ungal karuththukkum
      oru kavithai arimukam
      seythathukkum!
      nantri!

      Delete